The news is by your side.

ACMYC ஒன்றியத்தினால் ஹிப்ளு மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு

0 39

unnamed-2
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் (ACMYC) இலங்கையிலுள்ள மத்தரஸாக்களில் அல்-குர்ஆனை மனனம் செய்யும் ஹிப்ளு மாணவர்களுக்கு இலவசமாக அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி அமைப்பினால் சுமார் 40 மத்தரஸாக்களில் உள்ள 1500 ஹிப்ளு மாணவர்களுக்கு அண்மையில் அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

(ACMYC) ஒன்றியத்தின் தலைவர் என்.எம் நஜாத் தலைமையிலான ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் இலங்கையின் நாலா பாகங்களிலுமுள்ள 40மத்தரஸாக்களுக்கு நேரடியாகச் சென்று குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தார் ரீ.எம் றின்சான் கலந்துகொண்டார்.
unnamed-1

unnamedunnamed

Leave A Reply

Your email address will not be published.