Aram News 1st
Tamil News Website

கல்முனை மஹ்மூதில் இடம்பெற்ற Art Exhibition & political science stars 2017

அன்மையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கலை, மற்றும் வர்த்தகத்துறையில் Art Exhibition & political science stars 2017 இரு நிகழ்வுகள் இடம்பெற்றது.

தரம் 12 இல் “அரசியல் விஞ்ஞானம் ” பாடம் கற்கும் 3 வகுப்பு மாணவர்களிடையே கடந்த 2 நாட்களாக இடம்பெற்ற POLITICAL SCIENCE STARS 2017 இறுதி போட்டிக்கு 12 B , 12 D ஆகிய இரு வகுப்புக்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான இறுதி போட்டி இடம்பெற்றது.

இறுதி போட்டியில் 12 B யினை சேர்ந்த F3W அணியினர் 116 புள்ளிகளை பெற்று இவ்வருடத்திக்கான “Political science stars – 2017” சம்பியனாக தெரிவு செய்யப்படடனர்.

12D  வகுப்பை சேர்ந்த political queen  அணியினர் 100 புள்ளிகளை பெற்று Runner up  ஆக தெரிவு செய்யப்படடனர்.

இப்போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற 12B யில் F3W அணியை சேர்ந்த B. Fathima Rifna என்ற மாணவி 59 புள்ளிகளை பெற்று இவ்வருடத்தின் “Political science  star 2017 ” இன் woman of tha Star ஆக தெரிவு செய்யப்பட்டார்.

சாம்பியன் அணிக்கு
~ வெற்றிக் கேடயம்
~ political star பொறிக்கப்பட்ட  சுவர் மணிக்கூடு
~ வெற்றி அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கிண்ணம்,
~ சான்றிதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

தரம் 13 B வகுப்பு சித்திர பாட மாணவிகளால் சித்திரக்கண்காட்சி ஒன்றும் மிக சிறப்பாக இடம்பெற்றது. இதில் மனதை கவரும் மாணவிகளின் பல ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கலைப் பொருட்களும் மிகவும் சிறப்பான எண்ணக் கருத்தியலில் உருப்பெற்றிருந்தமை பாராட்டத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் ALM. MUKTHAR sir அவர்களும்,
கௌரவ அதிதியாக  கல்லூரியின் அதிபர் திருமதி S A. லியாகத் அலி அவர்களும் வலய அதிபர் அஸ்மி கரியப்பர் அவர்களும்
கலை வர்த்தக பிரிவு பகுதித் தலைவர் R.M.ஜலீல் அவர்களும்
ஏனைய பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், பகுதி ஆசிரியர்கள் மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

You might also like

Leave A Reply

Your email address will not be published.