Aram News 1st
Tamil News Website

கடல் கொந்தளிப்பு தொடர்பில் விசேட அறிவித்தல்…

புத்தளம் முதல் கொழும்பு காலி ஹம்பாந்தொட்டை ஊடாக கல்முனை வரையான கடற்பிரதேசங்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்பாக இருக்கும் என காலநிலை அவதானம் அறிவுறுத்தியுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நேரங்களில் கடற்பிரதேசங்களின் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றராக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.