Aram News 1st
Tamil News Website

கிரசன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

unnamed-3(எம்.ஜே.எம்.சஜீத்)
எதிர்க்கட்சித் தலைவரின் நிதியுதவியின் மூலம் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஒலுவில் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கதிரைகள் என்பன வழங்கப்பட்டுள்ளது.

இவ்விளையாட்டு உகரணங்கள் மற்றும் கதிரைகளை கையளிக்கும் நிகழ்வு கிரசன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆசிரியர் நாசர் தலைமையில் நேற்று (11) ஒலுவிலி்ல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை விசேட அதிதியாகக் கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.

இதன்போது தேசிய காங்கிரசின் ஒலுவில் பிரதேச அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.சீ றியாஸ், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம் றசீன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஹாறூன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரினால் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுunnamed-2

unnamed-4

You might also like

Leave A Reply

Your email address will not be published.