Aram News 1st
Tamil News Website

அரச இளம் கலைஞர் விருதுக்கு சாய்ந்தமருது நளீம் லதீப் தெரிவு…

naleem-latheef

கிழக்கு மாகாண அரச இளம் கலைஞர் விருதுக்கு சாய்ந்தமருது நளீம் லதீப் தெரிவு…

கிழக்கு மாகாணத்தில் இளம் கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் எண்ணக்கருவில் கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இளம் கலைஞர்களுக்கான அரச விருது வழங்கப்படவிருக்கிறது.

அந்த வகையில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் அடங்கிய கிழக்கு மாகாணத்தில் ஓவியம் மற்றும் கைவினை(கலைப்பொருள்) ஆகியவற்றுக்கு 2016 ம் ஆண்டுக்காண அரச இளம் கலைஞர் விருதினை ஆசிரியர் நளீம் லதீப் பெறுகிறார்.

இவ் விருது விழா இம்மாதம் ஒக்டோபர் 22ம் திகதி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இவ்வருடம் கிழக்கு மாகாண அரச விருது பெறும் கலைஞர் நளீம் லதீப் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
“அறம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான இவர் பிரபல எழுத்தாளரும்,நவீனதுறை ஓவியரும்,கலைஞரும்,அரசியல் விஞ்ஞானதுறை பட்டதாரியுமாவார்.

இவருடைய சொந்த எண்ணக்கருவில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை தனிமனித முயற்சியினால் தனது சொந்த ஊரில் மாத்திரம் மூன்றுக்கு மேற்பட்ட கண்காட்சிகளினை நடாத்தியுள்ளார்.
500க்கும் மேற்பட்ட கருத்தாளுமை மிக்க ஓவியங்களை வரைந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட தனித்துவமான அரபு எழுத்தணிகளையும் வரைந்து தன்னகப்படுத்தியுள்ளார்.
இவர் அகில இலங்கை ரீதியில் இஸ்லாமிய வங்கியினால் நடாத்தப்பட்ட அரபு எழுத்தணிப் போட்டியில் முதலிடம் பெற்றவர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2003ம் ஆண்டு நடாத்தப்பட்ட அரபு எழுத்தணிப் போட்டியிலும் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிசளிப்பு விழாவில் “இஸ்லாமிய கீதம்” தன்னியக்கப் பாடலில் முதலிடம் பெற்றுள்ளார்.
கிழக்கு கலை இலக்கிய பெருவிழாவில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கனேடிய நாட்டு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட 21நாள் முழு நேர தலைமைத்துவ பயிற்சியை வெற்றிகரமாக முடித்து சிறப்புச் சான்றிதழ் பெற்ற கலைஞர் நளீம் லதீப் தனது ஆற்றலுக்கான இணையமாக Naleem Latheef Art எனும் Like Page ஒன்றை செயற்படுத்தி வருகிறார்.
“உள்ளத்தில் உதித்தவை” எனும் சித்திர நூல் ஒன்றை வெளியிட்டுள்ள நளீம் லதீப்
www.Aramnews1st.com இன் பணிப்பாளராகவும், Aram friendship Aid Srilanka அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“மனசாட்சி” எனும் கவிதையினூடாக எழுத்துலகில் பிரவேசித்த இவர் பல்துறை எழுத்தாளரானார்.
தினகரன் பத்திரிகையில் இவர் எழுதிய சோழர்கால உரையாசிரியர்கள் கட்டுரை பிரசித்தமானவை பொதுப்படையான சமூகம் சார்ந்த காத்திரமான ஆக்கங்களினை இதுவரை எழுதிவரும் ஒரு துடிப்புள்ள சமூக அக்கறை கொண்ட ஒரு இளைஞனுக்கு இக் கிழக்கு மாகாண அரச இளைஞர் விருது கிடைப்பது மிகப் பெருமைப்படத்தக்க விடயமே!
இவரின் திறமைக்கு ஜனாதிபதி உயர் விருது கிடைக்கப் பிரார்த்திப்போம்.
Aram friendship Aid Srilanka அமைப்பின்மூலம் பல தரப்பட்ட சேவைகளினை இவர் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரின் உயர்ச்சிக்கும் எழுச்சிக்கும் வாழ்த்துக்கள்…
-ஷிபா. அவரின் கலைப்படைப்பில் சில unnamed-1unnamed20151003_090737unnamed-2

You might also like

Leave A Reply

Your email address will not be published.