The news is by your side.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸிக்கு வாக்களித்தால் அவ்வாக்காளர்களை அல்லாஹுத்தஆலா தண்டிப்பான்.

0 41

r

(மூதூர் முறாசில்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸிக்கு வாக்களித்தால் அவ்வாக்காளர்களை அல்லாஹுத்தஆலா தண்டிப்பான் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மூதூர் அரசியல் விழிப்புணர்வு மன்றத்தினால் மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி சந்திக்கருகில் ஞாயிற்றுக் கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக் தலைமையில் இடம்பெற்ற அக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மூதூரைச் சேர்ந்த சிலர் என்னை நேரில் சந்தித்து இம்மண்ணின் குறைகளைப் பற்றிக் கூறினர்.
திடீர் தௌபீக்குக்கு தேசியல் பட்டியல் தருவதாக என்னால் வாக்குறுதியளிக்க முடியாது. முழு மூதூர் மக்களும் விரும்புவார்களாக இருந்தால் எதிர் வரும் மாகாண சபை தேர்தலில் அவரை வெற்றிபெறச் செய்து இம்மண் கடந்த காலத்தில் காணாத அபிவிருத்தியை செய்யமுடியும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த பத்து வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றிபெறுவர். எம்மை நம்பலாம் என்றார்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்ததாவது,
திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் அப்துல்லா மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். யானைச் சின்னத்தில் முதலாம் இலக்கத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.

யானைச் சின்னத்தில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அப்துல்லா மஹ்ரூப் தான் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறிவரும் நிலையில் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் என்ற உண்மை வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

r1 r2 r3 r4

 

Leave A Reply

Your email address will not be published.