Aram News1st
Tamil News Website from Sri Lanka

வெண்குஷ்ட நோய் இலங்கையில் அதிகரிப்பு மக்களின் கவனயீனமே காரணம்

0 19

n1405176கடந்த சில வருடங்களாக இலங்கையில் வெண்குஷ்ட நோய் பரவுவது குறிப்பிட்ட அளவு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இந்தநோய் குறித்து பொருட்படுத்தாமல் செயற்படுவதே இதற்கு முக்கிய காரணம் எனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஜப்பான் நிகபான் மன்ற தலைவர் யொஹி அசகாவுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து வெண்குஷ்ட நோயை ஒழிக்க தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக இதன்போது அசகா உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் வெண்குஷ்ட நோய் உயர்வடைந்து வரும் நிலையில், அது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் பல திட்டங்களை ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் முன்னர் அடையாளம் காணப்படாத புதிய பகுதிகளில் இந்நோய் பரவியுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் இலவச சுகாதார சேவையின் கீழ் வறியவர், செல்வந்தர் என்ற பேதமின்றி சகலருக்கும் சுகாதார வசதிகள் சமமாக வழங்கப்படுகிறது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More