Aram News1st
Tamil News Website from Sri Lanka

வீட்டில் தேனீக்களை வளர்ப்பதற்கு ஏற்ற சிறிய தேனீ இல்லங்கள் விற்பனைக்கு…

0 43

bee_home_002

சுவிஸின் சூரிச்சில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்று வீட்டில் தேனீக்களை வளர்ப்பதற்கு ஏற்ற சிறிய தேனீ இல்லங்களை (Bee homes) விற்பனை செய்து வருகிறது.
Wildbiene + Partner என்ற அந்த நிறுவனம், தன்னிடம் இணையம் மூலம் ’தேனீ இல்லம்’ ஆர்டர் கொடுப்பவர்களுக்கு சுவிஸ் போஸ்ட் மூலமாக அந்த சிறிய மரத்தால் ஆன இல்லத்தையும் அதனுடன் 15 விஷத் தன்மையற்ற ஆண் மற்றும் பெண் தேனீக்களையும் பத்திரமாக அனுப்பி வைக்கின்றனர்.

பறவையின் கூடு போல உள்ள மரத்திலான அந்த சிறிய தேனீ இல்லத்தினை வீட்டின் வெளியே உள்ள சுவற்றில் எளிதாக மாட்டி வைத்துவிட முடியும்.

வசந்த காலத்தில் அந்த தேனீக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதுடன் மகரந்த சேர்க்கை நடத்தவும் தயாராகிறது.

இதையடுத்து குளிர்கால இலையுதிர் காலத்தில் Hibernation எனப்படும் தூக்கத்தில் இருக்கும் புதிதாக பிறந்த தேனீக்களை அதன் உரிமையாளர்கள் Wildbiene + Partner நிறுவனத்துக்கே அந்த மரபெட்டி இல்லத்துடன் அனுப்பி வைக்கின்றனர்.
DSC00444
இவ்வாறு நிறுவனத்துக்கு வரும் அந்த பெட்டிகளை அந்த நிறுவனம் மகரந்த சேர்க்கை பயன்பாட்டிற்காக விவசாயிகளிடம் அளிக்கின்றனர்.

பின்னர் அந்த மரப்பெட்டில் இல்லங்களை சுத்தம் செய்து மீண்டும் அதுனுடன் பாதுகாப்பான முறையில் புதிய 15 ஆண் மற்றும் பெண் தேனீக்களை வைத்து உரிமையாளருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அந்நிறுவனத்தின் பிரதிநிதி Ruetz கூறுகையில், இவ்வாறு செய்வதன் மூலம் தேனீ இல்லத்தின் உரிமையாளர்கள் தங்கள் தேனீகளின் எண்ணிக்கை 3 முதல் 4 மடங்கு வரை உயர்வதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் சுவிஸில் உள்ள தேனீக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே எங்களது முக்கிய நோக்கமாகும்.

தேனீக்கள் மூலம் மட்டுமே மகரந்த சேர்க்கை பெருமளவில் நடப்பதால் விவசாயிகளுக்கான சேவையாக இந்த பணியை ஆற்றி வருகிறோம்.

நம்முடைய உணவுகள் அனைத்தும் மகரந்த சேர்க்கையை நம்பியுள்ள நிலையில், ஆண்டுக்கு சுவிஸில் உள்ள தேனீக்களின் எண்ணிக்கையில் 3 பங்கு அளிந்து வருவது அபாயகரமானது என தெரிவித்துள்ளார்.

சுவிஸில் 600க்கும் மேலான காட்டுத் தேனீ இனங்கள் உள்ள போதிலும், மேசன் எனப்படும் தேனீக்களையே இந்த நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

மேசன் தேனீக்கள் பற்றி Ruetz கூறுகையில், அவை தனித்து வாழும் தேனீக்கள் என்பதால் அவற்றுக்கு ராணித் தேனீ தேவையில்லை.

அவை மகரந்த சேர்க்கையில் சிறந்து செயல்படுவதோடு அவை வெகு தூரத்திற்கு பறந்தும் செல்லாது.

மேலும், அவை யாரையும் கொட்டாது என்பதால் அவை ஆபத்தில்லாதவையாக இருக்கிறது. சிலர் இந்த தேனீக்களை தங்கள் செல்லப் பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் மூலம் இதுவரை சுமார் 2000 தேனீ இல்லங்களை விற்றுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கும் எனவும்
தெரிவித்துள்ளனர்.
bee9mapelli_5

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More