Aram News1st
Tamil News Website from Sri Lanka

வீசப்படும் கைத்தொலைபேசி பற்றரி 600 கனஅடி நிலத்தை நாசமாக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

0 31

pattery இலத்திரனியல் கழிவு களால் சூழல் மாசடை வதனை தவிர்க்கும் வகை யில் பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரிக் கும் வேலைதிட்டத்தை துரிதப்படுத்த சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கதக்க வளங் கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய கையடக்கத் தொலைபேசி கள் விற்பனை செய்யும் தனியார் கம்பனிகளை இத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஊக்குவிப்பதுடன் விசேட ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் கூறினார்.

கையடக்கத் தொலைபேசிகளில் உபயோகிக்கப்படும் மின்கலங்கள் (பற்றரிகள்) சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, அவற்றுள் அடங்கியுள்ள இரசாயன பதார்த்தம் அவை வீசப்பட்டிருக்கும் இடத்தின் 600 கனஅடி வரையிலான நிலப்பரப்பிலுள்ள இயற்கைத் தன்மையை அழிக்கவல்லவை. இதனால் குறித்த அப்பகுதி நச்சுத்தன்மையுடையதாகிறது.n-phone-battary

இதனால் அந்நிலத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்தும் வரைக்கூடிய தாவரங்கள் நச்சுத் தன்மையைக் கொண்டவையாகின்றன. வெற்றை உண்ணுவதால் மனிதனுக்கும் இந்த நச்சுத்தன்மை கடத்தப்படுகிறது.

இதனை தவிர்க்கும் வகையிலேயே இத்திட்டத்தை இலங்கையிலும் கடைபிடிக்க தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.

கணனி, கையடக்கத் தொலைபேசி மற்றும் வைத்தியசாலையில் உபயோகிக்கப்படும் வாசிப்பு மானிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பகுதிகளினாலேயே சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை ஏற்கனவே இது தொடர்பில் சில விழிப்புணர்வூட்டல்களை செய்ததன் மூலம் சில நிறுவனங்கள் பழைய கணனிகளின் பகுதிகளை சேகரித்து வருகின்றன. இவ்வாறு வழங்குவதனால் புதிய கணனிக்கு விசேட கழிவு வழங்கப்படுவதனால் மக்கள் பழையனவற்றை திருப்பி வழங்குவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். aramnews1.com

இதேபோன்றே உபயோகிக்காத பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரிக்கும் திட்டமும் விசேட கழிவு முறை அடிப்படையில் அமுப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முறைமை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறாக சேகரிக்கும் இலத்திரனியல் உபகரணங்கள் பின்னர் நுட்பமான முறையில் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் செயற்றிறனற்றதாக்கப்படும். இதன் மூலம் நிலம் அதன் இயற்கைத் தன்மையை இழக்காது சுற்றாடலை பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More