The news is by your side.

வில்பத்து அங்கு முஸ்லீம்கள் வாழவில்லை வேறு பிரதேசங்களில் குடியேற்றல் வேண்டும்

0 62

(அஷ்ரப் ஏ சமத்)

எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி என்ற சூழலியலாளா்கள் ஒன்றினைந்து வில்பத்து வனவளத்தில் சட்ட விரேதமாக முஸ்லீம்களை குடியமா்த்தல் இதற்கு பின்னால் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் இயங்குகின்றாா் என்ற தலைப்பில் ஊடக மாநாடு இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது.

இதில் ஓடேல் நிறுவனத்தின் ஒட்டார குணவா்த்தன, காலாநிதி எரிக் விக்கிரம. கலாநிதி செவாட் ஜெயா, ருக்சான், சஜ்சீவ, நானயக்கார ரன்வெல்ல, தினித் மல்லிக ஆகியோா் வில்பத்து வன வள ஜீவராசிகளை அளித்து அங்கு பாரிய வனவளம் இன்று அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினாா்கள்.

அத்துடன் இவ் விடயத்தில் பின் நிற்கும் அமைச்சா், மற்றும் சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், மற்றும் அரச அதிகாரிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி அவா்களை கைது செய்து சிரையிட வேண்டும் .

சில வாகானங்களை முறை கேடாக பாவித்தாா் என்ற போா்வையில் முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச சிரையில் இடும் எப் சி.டி. யினா் ஏன் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளனா். ? அத்துடன் சூழலியல் அதிகார மற்றும் வன வள சட்டத்தின் கீழ் இவ் சட்ட விரேதா வீடுகளை நிர்மாணிக்க உதவிய நிறுவனத்தின் உரிமையாளாரையும் கைது செய்ய சட்டத்தில் இடமுன்டு.

இவ்விடயமாக நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். சிலா் அவ்வாறு அங்கு நடைபெறவில்லை. என சான்றிதழ் பகின்றனா். இன்றும் அங்கு 5000 க்கும் அதிகமான வன வலங்கள் சூரையாடப்பட்டுள்ளன. இதனை அமைச்சா் றிசாத் பதியுத்தீன் முன்னைய ஆட்சியிலும் தற்போதைய நல்லாட்சியிலும் செயல்படுத்தி வீடுகளை நிர்மாணித்து வருகின்றாா் எனத் தெரிவித்தாா்கள்

கேட்கடப்பட்ட கேள்விகள்

  • நீங்கள் அமேரிக்க டொலா்களுக்கு இவ்வாறான என்.ஜி.ஓ வைத்து பேசுகின்றீா்கள் ?
  • பிரபகரன் வடக்கையும் கிழக்கை கட்டுப்பாட்டில் இருக்கும்போது நீங்கள் சூழலியல் என்ற போா்வையில் அங்கு போக முடிந்தா, அன்று வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் பிரபகரனும் இனைந்திருந்தால் இன்று இவ்வாறு வில்பத்து பற்றி உங்களால் பேச முடியுமா ?
  • ஏன் வட கிழக்கு முஸ்லீம் வாழும் நிஜ புமிகளை மட்டும் பேசுகின்றீா்கள் ஏனைய மாகாணங்களில் உள்ள வன ஜீவராசிகள் குடியேற்றம் நீங்கள் பேசுவதில்லை. வவுனியாவில் நாமல் ராஜபக்ச நாமல் கமவுக்காக 5000 ஏக்கா் நிலப்பரப்பில் காடுகளை அழித்து வீடுகள் கட்டி நிலமும் வழங்கி ஹம்பாந்தோட்டை கம்பஹா மக்களை குடியேற்றும் போது ஆக்ககுறைந்து இவ்வாறு ஒரு ஊடகமாநாடொன்றையாவது அவா்களுக்கு எதிராக வைக்க முடிந்ததா? . நாங்கள் முஸ்லீம்கள் என்றதற்காகவே இதனை இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இதனை பிரச்சாரம் செய்கின்றீா்கள் நீங்கள் செயற்படுவது டொலா்களுக்கு ,? என கேள்விகள் எழுப்பினேன் .
  • பிரபகரன் வடக்கையும் கிழக்கை கட்டுப்பாட்டில் இருக்கும்போது நீங்கள் சூழலியல் என்ற போா்வையில் அங்கு போக முடிந்தா, அன்று வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் பிரபகரனும் இனைந்திருந்தால் இன்று இவ்வாறு வில்பத்து பற்றி உங்களால் பேச முடியுமா ?
  • ஏன் வட கிழக்கு முஸ்லீம் வாழும் நிஜ புமிகளை மட்டும் பேசுகின்றீா்கள் ஏனைய மாகாணங்களில் உள்ள வன ஜீவராசிகள் குடியேற்றம் நீங்கள் பேசுவதில்லை.
    வவுனியாவில் நாமல் ராஜபக்ச நாமல் கமவுக்காக 5000 ஏக்கா் நிலப்பரப்பில் காடுகளை அழித்து வீடுகள் கட்டி நிலமும் வழங்கி ஹம்பாந்தோட்டை கம்பஹா மக்களை குடியேற்றும் போது ஆக்ககுறைந்து இவ்வாறு ஒரு ஊடகமாநாடொன்றையாவது அவா்களுக்கு எதிராக வைக்க முடிந்ததா?
  • நாங்கள் முஸ்லீம்கள் என்றதற்காகவே இதனை இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இதனை பிரச்சாரம் செய்கின்றீா்கள் நீங்கள் செயற்படுவது டொலா்களுக்? என கேள்விகள் எழுப்பினேன் .

பதில் ருக்சான்
ஏனைய பிரதேசங்கள் நடைபெற்ற வன வளங்கள் பற்றி அடுத்த மாதம் ஒரு ஊடகவியலாளா் மாநாடு நடத்துவோம் அதில் தெரிவிப்போம்.

அங்கு இடம் பெயா்ந்த முஸ்லீம்களை மீள குடியமா்த்த வேண்டும். ஆனால் அங்கு முஸ்லீம்கள் வாழவில்லை வேறு பிரதேசங்களில் குடியேற்றல் வேண்டும். இது வில்பத்து காட்டு வளம்,
பிரகரன் இருக்கும்போது நாங்கள் அங்கு சென்றுக்கின்றோம்.
நாமல் கம 5000 ஏக்கா் வவுனியாவில் குடியேற்றும்போது நாம் எதிா்த்தோம். மேலும் 5000 ஏக்கா் நிலம் எடுப்பதற்கு இரானுவம் முயற்சித்தபோது அதனை நாங்களே தடுத்து நிறுத்தினோம் என பதிலளித்தாா்கள்.

SAMSUNG CSC
SAMSUNG CSC SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC SAMSUNG CSC

Leave A Reply

Your email address will not be published.