Aram News1st
Tamil News Website from Sri Lanka

விருப்பு வாக்குகளில் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளவர்கள்

0 39
1_My_Sri_Lanka_Map
 
 கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5 லட்சத்து 566 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.இது பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரொருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாகும்.

சுஜிவ சேனசிங்க ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 49 வாக்குகளையும், ஹர்ஷ டி சில்வா  ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 148 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 394 வாக்குகளையும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஒரு லட்சத்து 444 ஆயிரம் வாக்குகளையும், எஸ்.எம் மரிக்கார் 92 ஆயிரத்து 526 வாக்குகளையும், முஜிபூர் ரஹூமான் 83 ஆயிரத்து 884 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

எரான் விக்ரமரத்ன 82 ஆயிரத்து 738 வாக்குகளையும், விஜயதாஸ ராஜபக்ஸ 81 ஆயிரத்து 758 வாக்குகளையும், ஹிருணிகா பிரேமசந்திர 70 ஆயிரத்து 584 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், மனோ கணேசன் 69 ஆயிரத்து 64 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட விமல் வீரவன்ச 3 லட்சத்து 13 ஆயிரத்து 801 வாக்குகளை பெற்றுள்ளார்.

உதய கம்மன்பில 1 லட்சத்து 98 ஆயிரத்து 818 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுசில் பிரேமஜயந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 75 வாக்குகளையும், தினேஸ் குணவர்தன ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 451 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதனிடையே, கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் படி, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க 2 லட்சத்து 16 ஆயிரத்து 463 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அர்ஜூண ரணதுங்க ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 890 வாக்குகளையும், ருவான் விஜேவர்தண ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 932 வாக்குகளையும், ஹர்சன ராஜகருணா ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 455 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட பிரசன்ன ரணதுங்க 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 வாக்குகளையும், பிரசன்னன ரணவீர ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 395 வாக்குகளையும், நிமல் லன்ஸா 94 ஆயிரத்து 375 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் ஹரின் பெர்னாட்டோ மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவர் 2 லட்சத்து 806 வாக்குகளை பெற்றுள்ளார்.

ரவீந்த சமரவீர  85 ஆயிரத்து 507 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

58 ஆயிரத்து  291 வாக்குகளை பெற்ற சமிந்த விஜயசிறி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.அரவிந்குமார் 53 ஆயிரத்து 741 வாக்குகளையும், வடிவேல் சுரேஸ் 52 ஆயிரத்து 378 வாக்குகளையும் பெற்று வெற்றிப்பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக நிமல் சிறிபாலடி சில்வா ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 406 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஷாமர சம்பந்த தசநாயக்க 64 ஆயிரத்து 418 வாக்குகளையும், தேனுக விதான கமனே 43 ஆயிரத்து 517 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் ஏ.எம்.எம் மஹரூப் 35 ஆயிரத்து 456 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளார்.

32 ஆயிரத்து 582 வாக்குகளை பெற்ற இம்ரான் மஹரூப் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட இரா.சம்பந்தன் 33 ஆயிரத்து 804 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் சுசந்த புஞ்சி நிலமே அதிக்கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

அவர், 19 ஆயிரத்து 953 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
மாத்தளை மாவட்ட விருப்பு வாக்குகளின் படி, ஐக்கிய தேசிய கட்சியின் வசந்த அலுவிகார அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

அவர் 75 ஆயிரத்து 926 வாக்குகளை பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட ரஞ்சித் அலுவிகார 74 ஆயிரத்து 785 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ரோஹினி கவிரத்ண 41 ஆயிரத்து 766 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையே, 79 ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்ற லக்ஸ்மன் வசந்த பெரேரா முதலாம் இடத்தை பெற்றார்.

ஜனக்க பண்டார தென்னக்கோன் 61 ஆயிரத்து 920 வாக்குகளை பெற்றார்.

பொலன்னறுவ மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக வசந்த சேனாநாயக்க 76 ஆயிரத்து 651 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தை பெற்ற நாலக்க கொலொன்னே 70 ஆயிரத்து 107 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதேவேளை, மூன்றாவது இடத்தில் சிட்னி ஜயரத்ன 41 ஆயிரத்த 295 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன்படி அவர் 76 ஆயிரத்து 825 வாக்குகளை பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தில் சிறிபால கம்லத் 63 ஆயிரத்து 309 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக நாமல் ராஜபக்ஷ ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 201 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் மஹிந்த அமரவீர 84 ஆயிரத்து 516 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

சமல் ராஜபக்ஷ 80 ஆயிரத்து 621 விருப்புவாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், டீ.வி.சானக 51 ஆயிரத்து 939 வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச அதிகூடிய விருப்புவாக்குகளாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 645 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
திலிப் வெதஆராச்சி 65 ஆயிரத்து 391 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

ஜே.வி.பியின் வேட்பாளரான நிஹால் கலப்பத்தி ஹம்பாந்தோட்டையில் பெற்றுகொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 162 ஆகும்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் விருப்புவாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் விஜித்த பேருகொட 74 ஆயிரத்து 313 விருப்புவாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் சுமேதா ஜி ஜயசேன 69 ஆயிரத்து 82 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

பத்ம உதயசாந்த குணசேகர சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், 57 ஆயிரத்து 356 விருப்புவாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரஞ்சித்; மத்தும பண்டார 82 ஆயிரத்து 316 விருப்பு வாக்குகளையும், ஆனந்த குமாரசிறி 44 ஆயிரத்து 7 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More