Aram News1st
Tamil News Website from Sri Lanka

விண்வெளியிலிருந்து புதிய விண்வெளியிலிருந்து புதிய டொலர்கள்

0 7

viv
கனடாவில் முதன்முறையாக பூமியின் மீது ஆயிரக்கணக்கான கி.மீ. உயரத்தில் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த விண்வெளி வீரர் கிறிஸ் ஹேட் ஃபீல்டு(Chris Hadfield) என்பவர் அங்கிருந்த படியே புதிய பத்து டொலர் மற்றும் ஐந்து டொலர் மதிப்பு பாலிமர் நோட்டுகளை வெளியிட்டுள்ளார்.
இந்த பத்து டொலர் நோட்டில் தொடர்வண்டியின் படமும், ஐந்து டொலர் நோட்டில் Canadarm மற்றும் Dextre போன்ற இயந்திர மனிதர்களின் படங்களும் அச்சிடப்பட்டு இருந்தன.
மேலும் ஹேட்ஃபீல்டு, அங்கிருந்தபடியே நிலக்கடலையைக் கொண்டு Peanut bitter செய்தும், தேன் மற்றும் கோதுமை அப்பளத்தை கொண்டு sandurich செய்தும் காட்டினார். தண்ணீர் கீழே சிந்திவிட்டால் அதைத் துடைத்து சுத்தம் செய்வது எப்படி என்றும் செய்தும் காட்டினார். காணொளிக் காட்சி மூலமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹேட்ஃபீல்டு விண்வெளிப் பயணம் முடித்து கனடா திரும்பியதும் அந்நாட்டு வங்கியின் ஆளுநர் மார்க் கார்னியையும்(Mark Carney), நிதி அமைச்சர் ஜிம் ஃபிளாஹெர்ட்டியையும்(Jim Flaherty) சந்திப்பார் என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த ஐந்து டொலர், பத்து டொலர் நோட்டுகள் கனடாவில் வருகின்ற நவம்பர் முதல் புழக்கத்திற்கு வரவுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More