Ceylon Moors
Tamil News News Network

ரவி அமைச்சராகிறார் ? இறுதி தீர்மானம் UNP நிறைவேற்று குழுவின் கைகளில் ..

0 56

முன்னாள் அமைச்சர் ரவி கருநாயக்கவுக்கு அமைச்சர் பதவியை மீண்டும் வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரிகொத்த  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை வெகுவாக விமர்சனம் செய்த விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் ரவிக்கும் அமைச்சு பதவி வழங்க வேண்டும் என கட்சிக்குள் ரவி ஆதரவு அணியின் அழுத்தம் வழுத்துள்ள நிலையில் ரனில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இது தவிர ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேருக்கு  பிரதி அமைச்சுக்கள் வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளது.

இது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்!!

You might also like
Comments
Loading...