The news is by your side.

மைத்திரியோ ஓடி விளையாடும் எச்.எம்.எம். ஹரிஸ்

0 21

spoits
ஆரோக்கியம், மகிழ்ச்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு, உடல் ஆரோக்கிய மேம்பாடு தொடர்பாக தேசிய வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய விளையாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்பில் 2016 ஜனவரி 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ”விளையாட்டு, உடல் ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான தேசிய வாரம்” எனவும் ஜனவரி 30ஆம் திகதி ” விளையாட்டு, உடல் ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான விசேட தினம்” எனவும் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இலங்கையில் வேகமாக உயர்வடைந்து செல்லும் தொற்றாநோய் நிலைமைகளை கட்டுப்படுத்தி ஆரோக்கியம், மகிழ்ச்சி, விளையாட்டு ஆர்வம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு ஜனாதிபதி அலுவலக முன்றலில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் எச்.எம்.ஹரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் திரு.பி.பீ.அபேகோன், ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
spoits

spoits01

spoits04

spoits05

spoits02

spoits03

Leave A Reply

Your email address will not be published.