Aram News1st
Tamil News Website from Sri Lanka

முட்டை ஓடு இல்லாமலும் கோழி குஞ்சு பொரியும்… (வீடியோ)

0 41

முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு முட்டையின் ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் புதிய முயற்சியின் மூலம் பாரம்பரியமான கோழி அடைகாக்கும் நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளனர்.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுத்து அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின்மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைக்கும் வகையில் அதை இழுத்து பெரிதாக்குகிறார்.

poultry_chick_brooder
அந்த உறையை ஒரு பிளாஸ்டிக் கோப்பையின் மீது போர்த்தி, முட்டையை உடைத்து கோப்பைக்குள் ஊற்றுகிறார்.

பின்னர், திறந்த நிலையில் அந்த கோப்பை இன்குபட்டரில் வைத்த பின்னர் முட்டையின் மஞ்சள் கருவின் சிறு துணுக்காக தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக மாறுகிறது.

இந்த ஆய்வை வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதுவரை அந்த வீடியோவை 10 இலட்ச பேர் பார்த்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More