Aram News1st
Tamil News Website from Sri Lanka

மட்டகளப்பு மாவட்ட அனைத்து கட்சிகளினதும் வேட்புமனு தாக்கல் படங்கள் மற்றும் விபரம்.

0 24
a
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  13 இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஈரோஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரும் வருகைதந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவை  முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹீர் மௌலானா தலைமையில் வந்த வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்புமனுவை  அதன் நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகைய்யா இராசமாணிக்கம் தலைமையில் வேட்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா ஆகியோர் வருகை தந்து தாக்கல் செய்தனர்.
மேற்படி பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் 16ம் சுயேட்சைக்குழுக்கள் 30ம் தங்களது வேட்புமனுக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
old

மட்டக்களப்பில் மு.கா, ஐ.தே.க மற்றும் UPFA சார்பில் போட்டி இடுபவர்களின் விபரம்.

எதிர்வரும் அகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள் நண்பகல் 12.00 மணியடன் நிறைவடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பிரதான அரசியல் கட்சிகளும் 30 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தினை செலுத்தி வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு மொத்தமாக 388 பேர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடிவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா தலைமையில் திங்கட்கிழமை ஸ்ரீல.மு.கா. கட்சிக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலிஸாகிர் மௌலானாதலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் றகுமான் மற்றும் கணக்காளர் எச். முஹம்மது றியால், எம். நளீம் மற்றும் தபாலதிபர் ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீல.மு.கா. கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பு (UPFA)

இவர்கள் தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் சார்பில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களானசிவநேசதுரை சந்திரகாந்தன், எம்.எஸ். சுபைர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஜவாஹிர் சாலி, ஆர். இராசமாணிக்கம் (சாணக்கியன்),மட்டக்களப்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் முதல்வர் ஜோர்ஜ் பிள்ளைஆகியோர் அடங்கிய குழுவினர் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளர்.

ஐக்கிய தேசியக் கட்சி

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் பிரதியமைச்சர்எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் ஏறாவூர் நகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எல். அப்துல் லத்தீப், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா, முன்னாள் பிரதியமைச்சர் கணேஷமூர்த்தி, சட்டத்தரணி ஏ.ஏ.எம். ரூபி, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் ஏ.சி. கியாஸ், போதகர் ஜோன், மற்றும் எஸ். ஜெகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

b d gi j k l

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More