Aram News1st
Tamil News Website from Sri Lanka

மஞ்சள்காமாலை நோய் வருவதற்கான காரணங்கள் எப்படி பரவுகிறது?

0 73

19-jaundice5-300
மஞ்சள் காமாலை நோய் தாக்கம் அவ்வளவு கொடியதா? மாற்ற முடியாத – சிகிச்சை அளிக்க நா.முத்துக்குமாரை மஞ்சள் காமாலை நோய் தாக்கி நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று உடல் நிலை ஓரளவு தேறியிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு , அதனை தாங்குவதற்குரிய உடல் வலிமை இல்லாமையால் உடனடியாக மரணம் நிகழ்ந்துள்ளது. அதனால் இந்த மாபெரும் கலைஞனை நாம் இழந்து நிற்கின்றோம். அவரது ஆற்றல்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

மஞ்சள் காமாலை நோய் தாக்கம் அவ்வளவு கொடியதா? மாற்ற முடியாத – சிகிச்சை அளிக்க முடியாத நோயா? அது குறித்து ஒரு விரிவான விளக்கம்.

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயே அல்ல. நோயின் அறிகுறி மட்டுமே. மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைந்துவிடலாம். வயதான சிவப்பு அணுக்கள் மண்ணீரலில் (Spleen)அழிக்கப்படும்போது பிலிரூபின் (Spleen) என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது. ரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது.
ht2249
கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

அறிகுறி
ஒருவருக்கு `மஞ்சள் காமாலை’ என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள் (A,B,C,D,G,E) மதுபானம் பேக்டீரியாக்கள் (டைபாய்டு காய்ச்சல்), மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், சில்லறை மருந்துகள், மதுபானம் அருந்துவதால் ஏற்படுகிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக்குழாயில் கல் மற்றும் கேன்சர் (Cancer) கட்டிகளாய் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.

கல்லீரலை தாக்கும் A,B,C,D,E,G என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை நேரிடலாம்.
Jaundice-Symptoms homeopathy treatment in chennai, tamil nadu
சிகிச்சை முறைகள்
அடைப்புக் காமாலை, அடைப்பில்லா காமாலை ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும். வயிற்றின் மேல்பாகத்தில் அதிக வலி, விஷக்காய்ச்சல் ஆகியன அடைப்பு காமாலைக்கான அறிகுறியாகும். ரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் மூலமாக இரண்டு காமாலைகளையும் வேறுபடுத்த முடியும். பொதுவாக மக்கள் பிலிரூபினின் அளவை மட்டும் ரத்தத்தில் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறார்கள். இது தவறானது. பிலிரூபின் அளவு மட்டுமின்றி கல்லீரலின் வேலை செய்யும் திறனையும் அறிய வேண்டும். இதற்கு Liver Function Test GßÝ என்று அழைக்கப்படும் புரத அளவு, நொதிகளின் அளவு போன்ற மற்ற ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமாக பித்தக்குழாயில் உள்ள கற்கள், கட்டிகள் போன்றவற்றை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். எந்தவகை மஞ்சள் காமாலை என்பதை அறியாமல் கீழாநெல்லி போன்ற மருந்துகளை சுயமாகச் சாப்பிட்டுவிட்டு நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால்தான் சிகிச்சை பலனில்லாமல் போகிறது.

எண்டோஸ்கோப்பி மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ அடைப்புக் காமாலையை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது. பித்தக்குழாய் கற்களால் ஏற்படும் காமாலையை சரிசெய்ய முன்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் இன்றைய அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியில் எண்டோஸ்கோப்பி மூலம் ERCP என்ற அதிநவீன சிகிச்சை முறையால் கல்லை ஆபரேஷன் செய்யாமலேயே வெளியே எடுத்துவிடலாம்.
28073
புற்றுநோயினால் பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் `ஸ்டென்ட்’ எனும் செயற்கை குழாயை எண்டோஸ்கோப்பி மூலம் பித்தக்குழாயின் உள்ளே பொருத்தி குழாய் சுருக்கத்தை நீக்கி மஞ்சள் காமாலையை குறைக்கலாம்.

கல்லீரல் சுருக்க நோயினால் (CIRRHOSIS) உணவுக்குழாயில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலை உருவாகலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்தவாந்திக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் மிகுதியாக இருந்தன. ஆனால் தற்போதைய மருத்துவ வளர்ச்சியினால் எண்டோஸ்கோப்பி மூலம் ரத்த வாந்தியை தடுக்க பேண்டிங் (Banding), (Sclero theoraphy),க்ளு இன்ஜெக்ஷன் (Glue injection) போன்ற நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற தலைவலி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வதாலும் ரத்தவாந்தி ஏற்படலாம். அவற்றையும் எண்டோஸ்கோப்பி மூலம் குணப்படுத்த முடியும்.

எப்படி பரவுகிறது?

வைரஸ் A மற்றும் E கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை (facco-oral Route) உட்கொள்வதால் பரவுகிறது. சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.

வைரஸ் B,C,D மற்றும் `G’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எப்படி பரவுகிறது என்பதை பார்ப்போம்.

1. பலமுறை, பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது, 2. நோயால் பாதிக்கப்பட்ட ரத்தம் கொண்ட தாயிடமிருந்து குழந்தைக்கும், நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் கொண்டவருடன் உடலுறவு கொள்பவருக்கும், போதை ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு மேற்கண்ட விபரீதங்கள் நேரிடலாம். இதில் `B’ வைரஸ் மிகவும் அபாயகரமானது. ஹெபடைட்டிஸ் `B’ ஒரு உயிர்க்கொல்லியாகும். இது கல்லீரல் சுருக்க நோய்களின் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்நோய் முற்றினால் பசியின்மை, கால்வீக்கம், வயிறு வீக்கம் போன்றவையும் ஏற்படும். முற்றிய நிலையில் ரத்தவாந்தி, புற்றுநோயும் வரும்.

தடுப்பு நடவடிக்கை

மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியமான ஒன்று. ஆனால் எந்தவகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது? கல்லீரல் வியாதி எந்த நிலையில் இருக்கிறது? என்பதை அறிந்த பின்னரே தகுந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ளுங்கள். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக்காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக சாப்பிடலாம். ஹெபடைட்டிஸ் A மற்றும் B-+Vயை தடுப்பூசி மூலம் விரட்டியடிக்கலாம். `B’ _க்கு தடுப்பு ஊசி போடுவதன் மூலம் `D’ வைரஸ$ம் நம்மை அண்டாது. ஆனால் C மற்றும் E-fj தடுப்பு ஊசியே கிடையாது.

`B’ வைரஸ் தாக்கியிருந்தால் ஒன்றுமுதல் 6 மாதங்கள் வரை மூன்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

`A’ வைரஸ் என்றால் 6 மாதங்கள் என்ற முறையில் ஊசிப் போட்டுக்கொள்ள வேண்டும்.

உரிய இடைவெளியில் தடுப்பூசி போடவில்லை என்றால் உரிய பயன் கிடைக்காது.

ரத்தம் மூலம் பரவும் வைரஸ்கள் `B’ மற்றும் `C’. எனவே ரத்தம் செலுத்தும்போது இக்கிருமிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானதாகும்.

வருமுன் காப்போம்
மஞ்சள் காமாலையை அறவே தடுப்பது அவசியமானதாகும். அதற்கு நன்கு காய்ச்சி, வடிகட்டிய நீரை பருகுங்கள். வெளியூர் மற்றும் உள்ளூர் பயணங்களிலும் காய்ச்சிய நீரையே பருகுங்கள். வீதியோரங்களில் விற்கும் கண்ட தின்பண்டங்களையும், ஈமொய்க்கும் பண்டங்களையும் கண்டு விலகி ஓடுங்கள். நகங்களை, கைகளை நன்கு சுத்தமாக வைத்திருங்கள். மலம் கழிந்த பின்னர் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பச்சைக்காய்கறிகளை `Salad’ முறையில் உட்கொள்வது இன்றைய பேஷனாக உள்ளது. அந்த காய்கறிகள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்துகொள்வது நல்லது. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள். மஞ்சள் காமாலை நோய் உங்களை கண்டு விலகி ஓடலாம்.

எமது பாரம்பரிய தமிழ் வைத்தியம் என்ன சொல்கின்றது மஞ்சள் காமாலை குறித்து ???

நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரலில் சுரக்கின்ற பித்தநீரின் அளவு இரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை பாதிக்கப்படுவதைத்தான் மஞ்சள்காமாலை என்று கூறுகிறோம்.

மஞ்சள் காமாலை நோயாளிக்கு தோல் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும்.

மஞ்சள் காமாலையில் சில முக்கிய வகைகள் உண்டு.

1. அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை – Obstructive jaundice

அப்ஸ்ட்ரக்டிவ் (Obstructive) என்றால் அடைப்பு என்று பொருள். பொதுவாக பித்தநீர் கல்லீரலால் சுரக்கப்பட்டு பித்தநீர் குழாய் வழியாக பித்த நீர்ப்பைக்கு அனுப்பப்படுகிறது. பித்த நீர்ப்பை அதை சேகரித்து வைத்துக் கொண்டு உணவு செரித்தலுக்கு குறிப்பாக கொழுப்பு சத்துள்ள உணவு செரித்தலுக்கு தேவையான பித்த நீரை அனுப்பும் வேலையை செய்கிறது.

இந்த அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை என்பது கல்லீரலால் சுரக்கப்பட்ட பித்தநீர் பித்த நீர்க்குழாயில் கொலஸ்ட்ரால், பித்தக் கல் போன்றவற்றில் ஏற்படும் அடைப்பின் காரணமாக பித்த நீர்ப் பையை அடையாமல் குடலுக்குச் சென்று விடுகிறது. இவ்வாறு அடைப்பின் காரணமாக ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக் டிவ் ஜான்டீஸ் என்று பெயர். இதில் சிறு நீர்கருப்பு நிறத்திலும் மலம் வெளுத்தும் காணப்படும்.

2. ஹெப்பட்டோ- செல்லுலார் ஜான்டீஸ் Hepatocellular jaundice

இது இரண்டாவது வகை மஞ்சள் காமாலையாகும். இவ்வகை கல்லீரல் செல்கள் சில நோய்களால் பாதிக்கப்படும் போது உண்டாகிறது. இவ்வாறு கல்லீரலானது நோயால் பாதிக்கப்படும்போது அது தன் வேலையை சரிவர செய்ய முடியாத நிலையில் குறிப்பாக தன் வேலையில் ஒன்றான பித்த நீரை, பித்தப்பைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுவதால், கல்லீரலால் சுரக்கப்படும் அந்த பித்தநீர் அங்கேயே தங்கி, ரத்தத்தில் கலந்து தேங்கிவிடுவதால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்குத்தான் ஹெப்பட்டோ- செல்லுலார் ஜான்டீஸ் என்றுபெயர். இவ்வகை நோயாளிகளுக்கு சிறுநீர் அடர்கருப்பாகவும், மலம் இயல்பான நிறத்திலும் போகும்.
20
மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்:

* பரம்பரைத் தன்மை

* ரத்தத்தில் பித்த நீரின் அளவு அதிகரித்தல்

* கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள்

* பித்த நீர்ப்பை மற்றும் பித்தநீர்க் குழாயில் ஏற்படும் அடைப்பு

* ரத்த சிவப்பணுக்களின் சிதைவு

* மது அருந்துதல்

* மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் அலோபதி மருந்துகள்

* மாசு பட்ட தண்ணீரில் காணப்படும் நோய்க்கிருமிகள் போன்றவை.

அறிகுறிகள்:

* பசியின்மை

* சோம்பல்

* களைப்பு

* வாந்தி

* குமட்டல்

* தலைவலி

* உடல் எடை குறைவு

* உடலில் அரிப்பு

* சாதாரண காய்ச்சல் அல்லது குளிர்க்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.

* காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப் பகுதிகள் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம் மஞ்சள் நிறத்துட னும் காணப்படும்.

சிகிச்சை:

முற்றிய வேப்பிலை, வில்வ இலை, கீழா நெல்லி, தும்பையிலை, சிறிது மஞ்சள் தூள் ஆகியவைகளை சம அளவு பறித்து வந்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு தம்ளர் ஆகுமாறு அடுப்பில் வைத்து வற்றக் காய்ச்சி பின் வடிகட்டி காலை, மாலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக நோய் தீரும்வரை உட்கொள்ளவும்.

அல்லது மேற்கூறிய மூலிகைகளை பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்குஒரு மணி நேரம் முன்பாக தினம் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் நோய் தீரும் வரை உட்கொள்ளலாம்.

உணவுமுறை:

நோயாளிகள் தினம் ஒருவேளை இயற்கை உணவுகளையும் மற்ற இரண்டு நேரம் எளிதில் ஜீரணமாகக்கூடிய சாதாரண சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ளவும். இதில் அவரவர் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ளலாம். இயன்றவரை உப்பை குறைத்து உண்ணவும். இவ்வாறு செய்தால் மஞ்சள் காமாலையை முறியடிக்கலாம்.

எந்த நோய் தாக்கமாக இருந்தாலும் வைத்தியர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகளை பெறுவதே சிறந்தது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More