Aram News1st
Tamil News Website from Sri Lanka

போலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி

0 102

batti06
மட்டக்களப்பு – வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசபை செயலாளர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்து முகநூல் ஒன்றினூடாக பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதை கண்டித்து கண்டன பேரணியொன்று இடம்பெற்றது.

பேரணியினால் மக்களின் சேவைகள் பல மணிநேரம் முடக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர்களினால் இன்று காலை இந்த கண்டன பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபைக்குப்பட்ட நிருவாகத்தின் கீழ் உள்ள அனைத்து சேவைப் பகுதி ஊழியர்களும் குறித்த கண்டன கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணியினால் மக்களின் சேவைகள் பல மணிநேரம் முடக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக ஊழியர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட கண்டன பேரணி பொது நூலகம்வரை சென்றதுடன் கண்டன பேரணி தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் போலியான தகவல்களை வெளியிடும் முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது,

கோறளைப்பற்று பிரதேசசபை தொடர்பாக பல்வேறுபட்ட தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், இவ்வாறான தகவலைப் பரப்பும் நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்வைத்தனர்.
batti04

batti05

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More