Tamil News Website from Sri Lanka

பரா ஒலிம்பிக் – இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

0 83

rio_srilanka
2016 ரியோ பராஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில் இலங்கை வீரர், தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தினேஷ் பிரியந்த ஹேரத்தின் தனிப்பட்ட சாதனையும் ஆகும்.

இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தை இந்தியாவும், வெள்ளிப் பதக்கத்தை சீனாவும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.