Ceylon Moors
Tamil News News Network

பயங்கரவாதத்தினால் சேதமடைந்த வியாபார ஸ்தலங்களுக்கு நஷ்டஈடு..

0 73

சமகால அரசாங்கம் பதவியேற்ற நாள் தொடக்கம் வடக்கில் உட்கட்டமைப்பு வசதிகளையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில் ,

பயங்கரவாத செயல்களால் வடக்கில் சேதமடைந்த வியாபார ஸ்தலங்களுக்காக இழப்பீடு வழங்கப்படும். வாழ்வாதார அபிவிருத்திக்காக கடன் திட்டமும் அமுலாகிறதென்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற ரீதியில் அரச சொத்துக்களின் உச்ச பயனைப் பெறுவது அரசாங்கத்தின் நோக்கமென பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்!!

You might also like
Comments
Loading...