Ceylon Moors
Tamil News News Network

நடிகர் ரஞ்சனின் வேஷம் களைந்துவிட்டது

0 17

ஊடகபிரிவு..மகா நடிகர் ரன்ஞன் ராமனாயக்கவின் வேஷம் கலைந்துவிட்டதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.
அத்தனகல்ல பிரதேத்தில் இடம்பெற்ற நிகழ்வு  ஒன்றில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ..
மகா நடிகர் ரன்ஞன் ராமனாயக்கவின் வேஷம் கலைந்துவிட்டது.மகா நடிகர் ரன்ஞன் ராமனாயக்க தனது பெயரில் இறக்குமதி செய்துள்ள தீர்வையற்ற சொகுசு வாகனத்தை மூன்று கோடியே எட்டு லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை பெருவதில்லை என கூறிக்கொண்டு தன்னை ஒரு ஹீரோவாக காட்டி வலம்வந்த நடிகர் ரஞ்சன் அவரது பெயரில் பி எம் டபில்யூ 730 3000 CC டீசல் கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
குறித்த கார் கடந்த வருடம் 9 ம் மாதம் ரஞ்சனின் பெயரில் அவருக்கு வழங்கப்பட்ட பேமிட் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட  மறு தினமே அது மூன்று கோடியே எட்டு லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
தனக்கு கிடைத்த பெர்மிட்டை விற்று தின்றுவிட்டு அடுத்தவர்களை விமர்சித்து திரிவது எவ்வளவு மோசமான செயல் என அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்!!

You might also like
Comments
Loading...