Aram News1st
Tamil News Website from Sri Lanka

நகம் முறைப்படி வெட்டாமல் பல்லால் கடித்தல் பற்றி…

0 18

04-1423043147-nail-biting--10-600

சாதாரணமாக நகம் வளர்ந்திருக்கும் போது, அதனை முறைப்படி வெட்டாமல், பலரும் பல்லால் கடித்து இழுத்து விடுவதுண்டு. இதனால், நகத்தின் ஓரங்களில் எதிர்பாராத காயம் ஏற்பட்டு, எந்த வேலையையும் செய்யமுடியாத அளவிற்கு, நகக்கண்ணின் ஓரத்தில் சீழ் கோர்த்தாற் போன்ற நிலை உருவாகி, மிகவும் அவஸ்தையான வலி ஏற்படும். இதனை கிட்டத்தட்ட எல்லோருமே, வாழ்வில் ஓரிருமுறையேனும் அனுபவத்திருப்போம்.

இதற்கென என்னென்னமோ வைத்திய முறைகளைக் கையாண்டுங்கூட, சரியாகாமல் பலநாட்களுக்குப் பெரும் அவஸ்தைப்பட்டிருப்போம். இது ஏற்பட அடிப்படைக் காரணமென வைத்தியர்கள் பலரும் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர்.

ஆனால், எனது அனுபவ ஆய்வின்படி, உண்மையான காரணம் என்னவென்றால், ‘நம் உடலில் ஊட்டச்சத்து சி (வைட்டமின் சி) திடீரென அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதனால் ஏற்படும், பின் விளைவேயாகும்’.

இதனை ஆங்கில மருத்துவத்திற்கு மாற்று மருத்துவமான ஹேமியோபதி மருத்துவர்களில், ஆராயுங்குணங் கொண்ட வெகுசிலர் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அதாவது, நகச்சுத்திக்குக் காரணமான, ஊட்டச்சத்து சி உள்ள உணவுப் பொருட்களை அளவுக்கதிகமாக நேரடியாக உண்டிருப்பீர்கள் அல்லது உணவில் பயன்படுத்தியிருப்பீர்கள் என்ற இருகாரணங்களைத் தவிர, வேறெதுவுமில்லை. இதில் உணவில் பயன்படுத்தியதை விட, நேரடியாக உண்பதால் ஏற்பட்டும் ஊட்டச்சத்து அதிதீவிரமாக ஏறிவிடும். அன்றன்று எகிறிவிடும்.

பழங்கள் அனைத்திலும், இந்த ஊட்டச்சத்து சி இருக்கிறது என்றாலுங்கூட, எலுமிச்சம் பழத்தில் முழுக்கமுழுக்க ஊட்டச்சத்து சியே அதிகமிருப்பதால், இதன் தாக்கம் மிக விரைவிலேயே நகத்தின் ஓரத்தில் சுறுசுறுவென குத்தவும், தெறிக்கவும் ஆரம்பித்துவிடும். பயன் படுத்துவதைக் குறைத்துக்கொண்டால், குத்தலுங்கூடாமல் குறைந்து விடும்.

இந்த ஊட்டச்சத்து சி சக்தியானது எலும்பு, பல், நகம் உள்ளிட்டவைகள் வளர பெரிதும் உதவியாய் இருக்கிறது. ஆனாலும், இவ்வூட்டச்சத்தின் அளவு, அளவுக்கு அதிகமாகி விடும்போது, பெரும்பாலும் நகத்தின் வழியாக மட்டுமே வெளியேறும் தன்மை கொண்டது.

இந்தக் கூடுதல் சக்தியைத்தான், பழக்க வழக்கத்தில் நகச்சுத்தி என்று, ஒரு நோயாகச் சித்தரித்து பீதியையும், பேதியையும் கிளப்பி விட்டு, பணஞ் சம்பாதித்து விடுகிறார்கள்.

ஆமாம், வழக்கத்திற்கு மாறாக, உடலில் எது நடந்தாலுங் கூட, அதனை நோயென
சித்தரித்து விடுவது, நோய்க்கான அடிப்படை இலக்கண மாகவும், மருத்துவர்
களின் இலட்சியமாகவும் இருக்கிறது.

ஆகவே, நன்றாக இருக்கும் உடலில், புதியதாய் ஏதாவது புறப்பட்டாலோ அல்லது மாற்றந்தெரிந்தாலோ, அண்மைக் காலமாக நாம் எந்த ஊட்டச்சத்து மிக்க உணவை அதிகமாக எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைக் குறைத்துக் கொண்டாலே, உடலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறைய ஆரம்பிப்பதை உணரலாம்.

நகச்சுத்தி கை விரலில் மட்டுந்தான் ஏற்படும் என்பதில்லை; கால் விரல்களிலுங்கூட ஏற்படும். என்றாலுங்கூட, கால் விரல்களில் ஏற்படுவது அரிதிலும் அரிதுதான். கை விரல்களில் கூட, ஆள்காட்டி விரலில் மட்டுமே ஏற்பட காரணமென்ன என்பது மட்டுந்தான், எனக்கின்னும் விளங்க வில்லை.

ஆள்காட்டி விரல் மட்டுமல்லாது, மற்ற விரல்களின் நகத்தைப் பல்லால் கடித்து இழுப்பதால், நகக்கண்ணின் ஓரங்களில் ஏற்படும் காயமானது, ஓரிரு நாட்களில் தானாகவே குணமடைந்து காணாமல் போய்விடும் என்பதை உங்களுக்கு ஏற்பட்ட, அந்நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நான் சொல்வதிலுள்ள உண்மை துலங்கும்.

ஆகவே, நகச்சுத்தியென்ற இந்தக் கொடும் அவஸ்தையைப் போக்க, மஞ்சளைச் சூடுபடுத்திப் பற்றிடுதல், இதில் கூடுதலாக சுண்ணாம்பு மற்றும் எலுமிச்சையைச் சேர்த்தல், எலுமிச்சையைச் சொருகுதல் உள்ளிட்ட எந்த வொரு வைத்தியத்தையும் செய்து, அக்கட்டியை உடைத்து உள்ளிருக்கும் கூடுதல் ஊட்டச் சத்துக்களைச் சீழென நினைத்து வெளியேற்றி, விரலை காயப்படுத்திக் கொண்டு, பின் அதனைக் குணமடையச் செய்யவேண்டிய அவசியமேயில்லை.

வெகுசிலர், இதற்காக ஆங்கில மருத்துவர்களிடம் சென்று அறுவை சிகிச்சைக்கூட, செய்து கொள்வதும் உண்டு.

மாறாக, ஊட்டச்சத்து சி நிறைந்துள்ள உணவு வகைகளைத் தவிர்த்தாலே, எப்படி கொஞ்சங் கொஞ்சமாக வலி உண்டானதோ, அப்படியே கொஞ்சங் கொஞ்சமாக குறைவதை உணர்வுப்பூர்வமாக காணலாம். அன்றன்று, ரசித்து மகிழலாம்.

ஆமாம், நமக்கு எது நடந்தாலும், அது முழுக்கமுழுக்க நம் அறிவு வறுமையால்தான் ஏற்படுகிறது என்பதை நன்றாக உணர்ந்து, நம் அறிவு வறுமையை மட்டும் போக்கிக் கொள்ளும் விதமாக, உடலில் ஏற்படும் மாற்றத்துக்கான அல்லது குறைப்பாட்டுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டால், அதிலுள்ள இன்பத்தைப் போன்று வேறெதிலும் இல்லை.

இதனை, நம் அறிவாற்றலால் இல்லாமல், மற்றவரின் அறிவாற்றலால், நம் உடலின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் போது, நமக்கு இம்மகிழ்ச்சி ஏற்படுவதில்லை என்பதன் மூலம், நாம் தெள்ளத் தெளிவாக உணரலாம்.

இப்படித்தான், எனக்கு ஏற்படும் எந்தவொரு ஒவ்வொரு நிகழ்விலும் ஆராய்ந்தறிந்தும், ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டும், நீங்களும் பயன்பெறும் வகையில், எதுவொன்றையும் மிகவும் மகிழ்ச்சியோடு எடுத்துரைக்கிறேன். அவ்வளவே!

ஒவ்வொரு படைப்புமே இயற்கையின் அற்புதங்களால் நிறைந்தது. இதனை மனிதன் தன் பிழைப்புக்காக அற்பத்தனமாக்கி வயிறு வளர்க்கிறான் என்பதை தெளிவுபடுத்தும் கட்டுரையிது!!

வாரண்ட் பாலா

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More