The news is by your side.

தேசிய அடையாள அட்டை தேசிய அடையாள அட்டை தொடர்பான விபரங்கள்..

0 36

jenny-1தேசிய அடையாள அட்டை என்பது இலங்கையில் பாவிக்கப்படும் அடையாளப்படுத்தலுக்காக ஆவணமாகும்.

இலங்கை குடியுரிமை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும்.

தேசிய அடையாள அட்டை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது.

முதன்முறை அடையாள அட்டையைப் பெறுபவர்கள் இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப் பிரஜையாக இருப்பதோடு 16 வயது நிரம்பியிருத்தல் வேண்டும். முதன்முறையாக அடையாள அட்டையை பெறுபவர்கள் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.190px-nic_of_sl

1. நிரப்பப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்) 2. பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)

3. துறவறம் பூண்ட மதகுருவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய அல்லது உபசம்பத சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.

4. கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள்

திணைக்களங்களினால் இவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட கடிதங்கள்.

5. 4 வர்ண புகைப்படங்கள் (13/8 * 7/8 அங்குலம்)

6. முத்திரைக் கட்டணம்

• 16 தொடக்கம் 17 வயதுவரையான விண்ணப்பதாரிகட்கு 3 ரூபா முத்திரை

• 17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகட்கு 13 ரூபா முத்திரை

7. திருமணமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருடன் சேர்க்கவிரும்பின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்

8. தொழில்பற்றி குறிப்பிட வேண்டுமாயின் பதவியை உறுதி செய்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்

1. அரச பிரிவு – 6 மாதகாலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவை சான்றிதழின் மூலப்பிரதி

2. தனியார் பிரிவு – 6 மாதகாலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவை சான்றிதழின் மூலப் பிரதி.

3. வைத்தியர், பொறியியலாளர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர் மற்றும் கட்டடக்கலைஞர் போன்ற பதவிப் பெயர்களை உள்ளடக்குவதற்காக பட்டச் சான்றிதழ் மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ் முன்வைக்க வேண்டும்.

4. ஓய்வூதியர் என்பதை உள்ளடக்குவதற்காக ஓய்வூதியக் கடிதம்/ஓய்வூதிய அட்டை முன்வைக்கப்பட வேண்டும்.

9. விலாசம் எழுதப்பட்ட 30 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை (அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதும் சொந்த விலாசத்துக்கு அதனை தபாலில் அனுப்புவதற்காக).

40 வயதிற்கு மேலான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை முன்வைக்கவும்

1. மேலதிக மாவட்டப் பதிவாளரால் விநியோகிக்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரம்.

2. பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து மூல சாட்சி (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ வயோதிபர் அடையாள அட்டை)

3. பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தினை உறுதிப்படுதுவதற்காக சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி.

காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியைப் பெற்றுக் கொள்ளல்

காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியினைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் இணைப்பிரதியினைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்கப் பெறுமாயின் அல்லது கண்டெடுக்கப்படுமாயின், உடனடியாக ஆணையாளர் நயாகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதி ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

2014/09/01 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் விபரங்களில் மாற்றங்கள் காணப்படாதவிடத்து மீண்டும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினை முன்வைப்பது அவசியமன்று.

ஆனபோதிலும் அவ்வாறான ஒரு நபர் அடையாள அட்டையில் தொழில் பெயரினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவான ஆவணங்களை முன்வைக்க வேண்டும்.

அவ்வாறே பிரஜா உரிமை, இரட்டைப் பிரஜா உரிமையினைப் பெற்றுக் கொள்ளல், துறவறம் பூணுதல், துறவறத்திலிருந்து விலகுதல், திருமணமாகுதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2014/09/01 ஆம் திகதியிற்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆ.ப.தி/வி/1,7,8 மாதிரிப்படிவத்துடன் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் போட்டோ பிரதி. (முன்வைக்கப்பட்டுள்ள பிரதிகளினூடாக விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்)
jenny-1
1. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி

அல்லது

1. உத்தேச வயதுச் சான்றிதழுடன் பிறந்த திகதியை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/

உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி)

2. பிரஜா உரிமைச் சான்றிதழ் (தொடர்பு படுத்துங்கள்)

அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளித்தல்

1. சாதாரண சேவை:விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தருக்கு

2. ஒரு நாள் சேவை:உரிய உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய பின்னர் ஆட்பதிவுத் திணைக்கள கொழும்பு பிரதான காரியாலயத்தில் ஒரு நாள் சேவைப் பிரிவிற்கு

அடையாள அட்டையை திருத்துவதற்கான காரணங்கள்

•முதன்முதல் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆளின் தற்போதைய உருவமும் வித்தியாசப்படல்.

•பெயர் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்படல்.

•வசிப்பிடம் மாறியதால் ஏற்பட்ட விலாச மாற்றம்.

•தொழில் மாற்றத்தினால் அல்லது தற்பொழுது செய்யும் தொழில் வேறுபடுவதால் தொழிலின் பெயரைச் சேர்த்தல்.

•முதல் அடையாள அட்டையில் குறிப்பிட்ட விடயங்கள் தெளிவற்றிருத்தல்.

•பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை பழுதாகியமை அல்லது சிதைந்து போயிருத்தல்.

•1972-1974 காலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இப்பொழுது செல்லுபடியாகாதாகையால் புதிய அடையாள அட்டைகள் வழங்குதல்.

அட்டையை திருத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

•ஆட்பதிவுத்திணைக்கள வீ (8) ம் இலக்க விண்ணப்பப்படிவம் (இளஞ்சிவப்பு நிறம்/சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட படிவம்)

•பழைய அடையாள அட்டை.

•4 வர்ணப் புகைப்படங்கள் (13/8*7/8 அங்குலம்)

•தொழில் குறிப்பிடப்படவேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3 மாதங்களுக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகளைப் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

உதா – மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்றோர் தொழில்சார் தகைமைகள் தொடர்பாக பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.

•15 ரூபா பெறுமதியான முத்திரை.

•அடையாள அட்டை இலக்கம் பாவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையில் இலக்கம் தெளிவில்லாமல் இருப்பின்)

•அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயர், பிறந்ததிகதி பற்றிய விபரங்கள் மாறுபட்டு அல்லது தெளிவில்லாமல் இருந்தால் பிறப்புச் சான்றிதழ், உத்தேச வயதுச் சான்றிதழ்களின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி அல்லது வெற்றுவிடை ஆவணத்துடன் மாற்று ஆவணங்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.

•விவாகமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருக்கு முன் சேர்க்க வேண்டியிருந்தால் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.

•பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.

•திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.

•கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால், இவர்கள் சமய குருமார்கள், என்பதை உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட கடிதங்கள்.

குறுந்தகவல் சேவை

நீங்கள் அனுப்பிய விண்ணப்பப்படிவம் தொடர்பில் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு குறுந்தகவல் முறையை பயன்படுத்தலாம். DRP <இடைவெளி> STS <இடைவெளி> விண்ணப்பப்படிவ

இலக்கத்தினைப் பத்திவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதன் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணனி முறைமையில் இடம்பெறும் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையின் நிமித்தம் இச்சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நடைமுறை ஆரம்பிக்கப்படும் வரை கீழ்

குறிப்பிடப்படும் துரித அழைப்பு மற்றும் துரித தொலைநகல் சேவையினூடாக தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

துரித அழைப்பு – 0112555616

துரித தொலைநகல் – 0112506458/0112593634

மேலும் இச்சேவையானது 24 மணி நேரமும் செயற்படுவதோடு இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

ஒரு நாள் சேவை

இச் சேவைக்காக அரச கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படுவதுடன், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (வேலை நாட்களில்) மு.ப. 08.00 முதல் பி.ப. 02.30 வரை

விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளபடுவதுடன் பி.ப. 4.15 வரை அடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

இந்தச் சேவையினூடாக நாளொன்றிற்கு அண்ணளவாக 1000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதோடு, நேரங்காலத்துடன் விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் துரிதமாக அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு நாள் சேவைக்கு விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் சமுகமளிப்பது கட்டாயமாகும்.

ஆனபோதிலும் விசேட தேவை உடைய நபர்கள் (உடல், உள பாதிக்கப்பட்ட/ வயோதிபர்கள்) அவர்கள் தொடர்பில் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் உறுதிப்படுத்துவாராயின் தாய், தந்தை, வாழ்க்கைத்துணை, சகோதர சகோதரி அல்லது சட்ட பூர்வ பாதுகாவலரிடம் அடையாள அட்டையினை கையளிக்க முடியும்.iss-17

Leave A Reply

Your email address will not be published.