Aram News1st
Tamil News Website from Sri Lanka

தென் ஆப்பிரிக்காவை 36 ஓட்டங்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா

0 21

india-loss-415x260
மூன்று நாடுகள் பங்கேற்கும் மும்முனை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. வார்னர் 109 ரன்னும், குவாஜா 59 ரன்னும் எடுத்தனர். இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும், அபோட், ரபடா, பர்னல் பாஞ்சியோ தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 47.4 ஓவர்களில் 252 ரன்னில் சுருண்டது. டுபெலிசிஸ் 63 ரன்னும், அம்லா 60 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் ஹாசல்வுட், ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இந்தத் தொடரில் அவுஸ்திரேலியா பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. 5-வது லீக் போட்டி நாளை நடக்கிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் – அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More