The news is by your side.

ஜப்பானில் தீ விபத்து 140 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகின…

0 73

japan-fire

ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இற்றொய்காவா (Itoigawa) நகரில் பெரும் தீ மூண்டதை அடுத்து அப்பகுயில் அமைந்துள்ள 140 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இன்று வியாழக்கிழமை ஜி.எம்.ரி நேரப்படி 13.30 மணியளவில் நீகாட ப்ரிஃபெக்சர் மையத்தில் அமைந்த சீன உணவகத்தில் தீ எரியத் தொடங்கியது. பின்னர் தீயானது மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய காற்றுடன் சேர்ந்து அருகில் அமைந்த 140 கட்டிடங்களுக்குள் பரவியுள்ளது.Japan Fire

குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒருவர் தீயால் எழுந்த புகையைச் சுவாசித்தமையை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றவர் விழுந்து மண்டை உடைந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரில் ஒருவ பெண் எனத் தெரிய வருகிறது. பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் போராடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.