Aram News1st
Tamil News Website from Sri Lanka

சுவிஸ் செய்திகள் உலகம் முழுவதிலும் பள்ளிகள், தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன: செஞ்சிலுவை சங்கம் குற்றச்சாட்டு!

0 18

redcross

சிரியா உட்பட உலகம் முழுவதிலும் மருத்துவமனைகள், பள்ளிகள், தேவலாயங்கள் போன்றவை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக சுவீஸின் செஞ்சிலுவை சங்கத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.ஆயுத போர்களுக்காக மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி மையங்கள் சிரியா மற்றும் இதர நாடுகளில் அதிக அளவில் உருவாவதாக செஞ்சிலுவை சங்கத் தலைவர் பீட்டர் மவுரர் கூறியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு அறிக்கையின் படி பள்ளிகள், தேவாலயங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டது வருந்தத்தக்க ஒன்றாகும்.மேலும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட மருத்துவமனைகள் பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் மீண்டும் இராணுவத்தினரால் சரிசெய்யப்படும்.மேலும் தீவிராவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து செயல்களுக்கும் அனைத்து தரப்பிடம் இருந்தும் ஊக்கப்படுத்துதல் வருகின்றன. இவை அனைத்தும் எந்த வித ஆதரவும் இல்லாமல் நடைபெறாது. ஆயுத போராளிகள் செஞ்சிலுவை சங்கத்தின் படி மிகப்பெரிய குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

2012ல் நோய்வாய்ப்பட்ட மக்கள், மருத்துவ வசதிகள் போன்றவற்றிற்கு எதிரான 921 ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பின் தொடர்ந்து தாக்குதல்களினால் செஞ்சிலுவை சங்கத்தால் முதல் உதவிகள் எதுவும் செய்ய முடிவதில்லை.மேலும் ஒன்பது அல்லது பத்து குழுவினர் அருகில் உள்ள ஆரோக்கிய கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர், மற்ற நேரங்களில் சர்வதேச கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மேலும் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் அதிகமாக கொல்லப்படுவதால் இச்சங்கத்திற்கு முறையான பாதுகாப்புகள் தேவை எனவும் கூறியுள்ளார்.

தற்போதைய ஆண்டறிக்கையின் படி சிரியாவில் அதிகமான உரிழப்புகள் மற்றும் பொருள் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. சிரியா மக்களின் கோரிக்கைகளை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும் உலக நாடுகளிடம் இருந்து திரட்டப்பட்ட நிதிகள் அனைத்தும் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவழிக்கப்பட்டுவிட்டது.
தற்போதைய நிலையில் உதவி நிறுவனங்கள் மற்றும் பல நாடுகள் ஒருங்கிணைந்து சிரியா நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என மயூரர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More