Aram News1st
Tamil News Website from Sri Lanka

சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக கிரிக்கட் போட்டி…!

0 23

(Zahir AMM)

சாய்ந்தமருது கரைவாகு பொது விளையாட்டு மைதானத்தில் இன்று விளையாட்டு மைதான அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் 2வது நாளாக நடைபெற்ற சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டுக்கழகத்துக்கும் சாயந்தமருது சன் பிளவர் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான கடின பந்து சுற்றுப் போட்டியில் சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டுக் கழகம் முதலாவது வெற்றியை சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இன்று பதிவு செய்தது.

20150524_181115

போட்டி விபரங்கள்

முதலில் துடுப்பெடுத்தாடிய சன்பிளவர் விளையாட்டுக்கழகம் 18 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களை எடுத்து சகல விக்கட்டுக்களையும் இழந்தனர். வொலிவெரியன் கழகத்தின் சார்பில் இர்சாத் 4 விக்கட்டுக்களையும் உவைஸ் 2 விக்கட்டுக்களையும் இர்பான், பாயிஸ் மற்றும் பயாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வொலிவேரியன் விளையாட்டுக்கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பயாஸ்(தாம் தும்) 41 ஓட்டங்களையும் அணித்தலைவரும் கழகத்தின் தலைவருமான ஸாஹிர் 22 ஓட்டங்களையும் பாயிஸ் 22 ஓட்டங்களையும் பெற்றதோடு உவைஸ் அதிரடி ஆட்டத்தின் மூலம் 11 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இதன் மூலம் வொலிவேரியன் விளையாட்டுக்கழகம் 6 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. அத்துடன் சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக போட்டியாகவும் இக்கடின பந்து சுற்றுப் போட்டி அமைந்தது.

20150524_180329

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More