Aram News1st
Tamil News Website from Sri Lanka

சர்வதேச சிறுவர் தினம்…இன்று…

0 54

a சர்வதேச சிறுவர் தின (01.10.2016) சிறப்புக் கட்டுரை

சர்வதேச ரீதியில் சிறுவர் தினங்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகின்றன. எனினும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இவ்வருட சிறுவர் தின தொனிப்பொருள் நாளைய சிறுவர்களுக்கு புதிய உலகம் என்பதாகும்.

சிறுவர் துஸ்பிரயோகம் என்பது வேறு தரப்பினரால் சிறுவர் சட்டபூர்வமற்ற ஒரு செயலுக்காக ஈடுபடுத்துதல் .சிறுவர் துர்நடத்தை என்பது சிறுவனாலேயே
செய்யப்படுகின்ற சட்டபூர்வமற்ற செயல்களாகும். இவ்விதமாக இரு விதங்களில் ஏந்தவொரு செய்கையும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெறக்கூடிய குற்றமாகும்.
சிறுவர் துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டுமாகவிருந்தால் நாட்டில் சிறுவர்க்கென்று தனியான நீதிமன்றுகள் அமைக்கப்பட்டு அதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட உரிய தண்டனைகள் குறுகிய காலத்துள் வழங்கப்படவேண்டும்
ஏனைய நீதிமன்றங்களில் பகிரங்கமாக விசாரிக்கப்படும்போது பல உண்மைகள் வெளிவராமல் தூங்கிவிடுகின்றன.எனவே நாட்டில் சிறுவர் நீதிமன்றங்கள்
அமைக்கப்பட வேண்டும்.c
ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகிறது.. உலகில் வாழ்கின்ற மக்களில் 1ஃ3 பங்கினர் சிறுவர்களாகக்
காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள் கலவரங்கள் இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வருட சிறுவர் தின தொனிப்பொருள் நாட்டைக்காப்பது போல் உங்களதும் எங்களதும் சிறுவர்களைப் பாதுகாப்போம்என்பதாகும். .இவ்வருட சிறுவர் தின
தொனிப்பொருள் நாளைய சிறுவர்களுக்கு புதிய உலகம் என்பதாகும்.
இலங்கையில் தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபை சிறுவர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்தால் ௧௯௨௯ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும். சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர்களுக்கு துர்நடத்தைகள் ஏதாவது ஏற்பட்டால் 24 மணித்தியாலயச் சேவையாக காணப்படும் 1929 என்ற தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யலாம்.
சிறுவர் துஸ்பிரயோகம் துர்நடத்தைகளில் ஈடுபடுத்துவதற்கு 120 வருடத்திற்கு மேலான தண்டனைகள் சட்டத்தில் உள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரதி தலைவி திருமதி நந்தா இந்திராவம்ச தெரிவித்தார்.
தற்காலத்தில் பாடசாலை மட்டத்தில் ஏகப்பட்ட துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதை ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் அறிய முடிகிறது. குறிப்பாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இதில் கூடுதலாக சம்பந்தப்படுவது வேதனைக்குரியது. இது எதிர்காலத்தில் சிறந்த பாடசாலைக் கவின்னிலையை ஏற்படுத்த தடையாக அமையலாம்.
கூடவே புரிந்துணர்வுள்ள நல்ல ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. எனவேதான் சிறுவர் துஸ்பிரயோகம் துர்நடத்தைகளை நீக்குவதற்கு அமைப்பானதுf
பாடசாலை மட்டத்தில் நல்லொழுக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது 50இற்கு மேல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றது.
கிராம மட்டத்தில் மேலும் காதினால் கேட்கமுடியாத பல துர்ச்சம்பவங்கள் இடம்பெறுவதை நாளாந்தம் அறிகிறோம். தந்தை மகள் வன்புணர்வு கூட
நடந்தேறியுள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க சம்பவங்கள் தினமும் பரவலாக நடக்க ஆரம்பித்துள்ளன. இதற்கெல்லாம் அடிப்படையில் காரணங்களில்லாம லில்லை. மனிதன் இயந்திர வாழ்வியலுக்குட்பட்டு மனிதத்தை இழந்து ஆன்மீக பண் புகளை இழந்து மானிட விழுமியங்களை இழந்து நடைப்பிணமாக வாழும் ஆரோக்கியமற்ற சூழலும் காரணமாகலாம்.
கிராம மட்டத்தில் உள்ள மக்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெறாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான
விழிப்புணர்வுகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இன்று இலங்கையில் நாவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இதில் பல்வேறு விதமான சிறுவர்கள் காணப்படுவதுடன் இவர்களின் தேவைகள் பல்வேறு விதமாக காணப்படும். இவர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.
நமது நாட்டின் தலைவர் அவர்களால் பயங்கரவாதத்தை இல்லாதொழித்தனால் தான் நல்ல முறையிலும் அமைதியாகவும் சிறப்பாகவும் இத்தினத்தை நாம் நினைவு கூறுகின்றோம். அத்துடன் இப்படியான ஒரு தினத்தில் சிறுவர்களை ஒன்று சேர்த்து அவர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்த வேண்டும். அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து பூரணமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
உலகத்திலேயே பல்வேறு வகையான சிறுவர்கள் பலவகையான திறன்களுடன் பிறக்கின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறுவர்கள் தூய்மையான உள்ளங்களை உடையவர்களாகவும் நாட்டுக்கு விசுவாசம் உள்ளவர்களாக உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 18 வயதுக்கு குறைந்த அனைத்து மாணவர்களும் சிறுவர்களாக காணப்படுவர். இவர்களை அனைவரும் கண்காணித்து அவர்களுடைய அடிப்படை தேவைகள் அடிப்படை உரிமைகள் என்பவற்றை வழங்க வேண்டும்g
சிறுவர்கள் என்போர் தூய்மையானவர் ஒழுங்கானவர் இவர்களுடைய நடத்தைகளை சீர்குலைப்பதற்கு வெளியில் நிறைய சக்திகள் காணப்படுகின்றது. இதிலிருந்து பாதுகாப்பாகவும் கண்காணிப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் உங்களை உங்களுக்கு பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.. உங்களை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் நல்ல பிரஜையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் அமையும் ;என்றார்.
சிறுவர் உரிமை பிரகடனம்
உலகலாவிய ரீதியில் நோக்கின் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள் பாலியல் வன்புணர்ச்சி சிறுவர் தொழிலும் வேலைப்பளுவும் சிறுவர்களை ஆயுதப் போராட்டங்களில் இணைத்துக் கொள்ளுதல் கடத்துதல் மோசடிகள் உள ரீதியான பாதிப்புள்ளாக்குதல் என பல் வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
இத்தகைய நிலைமையில் இரண்டாம் உலகப் போரின் பின்னணியுடன் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. சிறுவர்கள் தொடர்பாக ஐ.நாவினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களில் 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் ஒக்டோபர் முதலாம் திகதியை சர்வதேச சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தியமை யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமையும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐ.நா சபை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக எழுத்துருவில் பல்வேறு பிரகடனங்களும் சட்டங்களும் காப்பீடுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அன்றாடம்
சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து வருகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பங்கள் கடத்தல்கள் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் பிள்ளைத் தாய் பிரச்சனை போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.s
அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள்!
கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்;றுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள அதேநேரம் மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களும் கடந்த காலங்களில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. நகர்ப்புறங்களில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் தனி;ப்பட்ட குரோதங்களுக்காகவும் பணத்திற்காகவும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும் குறிப்பாக வறுமையும் ஒரு காரணம் எனக்
கூறப்படுகின்றன. பெருந்தோட்டங்கள்இ கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்திவிட்டு செல்வந்த வீடுகளுக்கும் கடைகள் ஹோட்டல்கள் கராஜிகள் போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகின்றனர்.
பெருந்தோட்டங்களில் கடந்த 5 வருடத்திற்குள் ஹட்டன் வெலிஓயா தோட்ட சிறுவன் அர்ச்சுனன் லோகநாதன் பத்தனை போகவத்தை புவனேஸ்வரன் லிங்கேஸ்வரன் கெட்டபுலா கிருஷ்ணவேணி மஸ்கெலியா லக்ஷபான சென் அன்றூஸ் தோட்ட சிறுமியர் ஜீவராணி சுமதி ஆகியோர் வீட்டு வேலைக்கு சென்று மரணமடைந்த சம்வங்கள் மலையகத்தில் சிறுவர் தொழிலாளர்களின் நிலையைப பறைசாற்றுகின்ற அதேவேளை அண்மையில் அம்பாறையின் சென்றல் கேம்பில் மதுனுஸ்ரிகா என்ற வாணி வித்தியாலய சிறுமி முட்டை விற்கச் சென்ற வேளையில் கொடூராமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் கொழும்பில் 7வயது சிறுமி வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதனால் எதிர்கொள்கின்ற பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்வதேன்?v
ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்றும் உறுப்புரை 28 சிறுவர்களின் கல்வி உரிமையையும் வலியுறுத்துகின்ற போதிலும் இலங்கையில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கப்பட்ட போதிலும் கூட மேற்குறித்த சம்பவங்கள் சிறுவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெளிவுபடுத்துகின்றன. இத்தகைய சிறுவர் கொலைகள் சம்பவங்களுக்கு சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதலே காரணம் என்று ஒரு சாரார் வாதாடுகின்ற அதே நேரம் வறுமையும் பொருளாதார நெடுக்கடியும் காரணம் என இன்னொரு சாரார் வாதாடுகின்றனர்.
பெருந்தோட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாழும் பிரதேசங்களில் குடும்பத்தின் பொருளாரத்தைக் கவனத்திற்கொண்டு பிள்ளைகள் பல்வேறு வேலைகளுக்கு இடைத்தரகர்கள் ஊடாக அனுப்பப்படுகின்றனர்.
மேலும் பெற்றோர் மத்தியில் பிள்ளைகள் தொடர்பான அன்பு, அக்கறையின்மை, பெற்றோர்களின் குறைந்த கல்வியறிவு, சிறுவர் உரிமைகள் தொடர்பான
விழிப்புணர்வின்மை ஆகியன சிறுவர் தொழிலை ஊக்குவிக்கும் காரணிகளாகும்.
இலங்கையில் தேசிய ரீதியான கல்வி வளர்ச்சி (2003ஃ2004) 92..5 வீதமாகவுள்ள அதேநேரம் நகர்ப்புறக் கல்வி 94.8 வீதமாகவும் கிராமப்புற கல்வி வளர்ச்சியும்
பெருந்தோட்ட கல்வி வளர்ச்சியும் முறையே 92.8, 81.3 வீதமாகக் காணப்படுகின்றது.
ஏனைய துறைகளை விட பெருந்தோட்டத்துறையின் கல்வி வளர்ச்சி வீதம் குறைவடைந்திருக்கின்றமைக்கு சிறுவர் தொழில் பிரதான காரணமாகின்றது. மேலும் தேசிய ரீதியாக பாடசாலைக்கு செல்லாதோர் 7.9 வீதமாகவுள்ள அதேநேரம் பெருந்தோட்டத்;தில் 19.9 வீதமாகக் காணப்படுகின்றத. எனவே பெருந்தோட்டங்களில் மாணவர் இடைவிலகல் அதிகரித்து வருகின்றதென்பது உறுதியாகின்றது.
சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக் கெதிரான வன்முறைகளைx
இல்லாதொழிக்க முடியும். ஓவ்வொரு பெற்றோரும்இ ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.;; நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துக்களாக கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சிறுவர் தொடர்பான முக்கிய விடயங்கள்
18 வயதைப் பூர்த்தி செய்தவர சட்டப்படி பராயமடைந்தவராகக் கருதப்படுவார்.
ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு ஆணுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்த வயது 18 ஆகும்.(முஸ்லிம் விதிவிலக்கு)
16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையுடன் அவரின் விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ பாலியல் தொடர்பு கொள்ளும் ஒருவர் தண்டனைச் சட்டக் கோவையின்படி பாரதூரமான குற்றத்தைச் செய்தவராகிறார்.
13 வயதுக்கு குறைவான சிறுவனை வேலைக்கமர்த்தினால் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
14 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் கட்டாயமாகும். 1997ஆம் ஆண்டின் 100-35 இலக்க அரச வர்த்தமானி கூறுகிறது. பாடசாலைச் சிறுவர்களுக்கு உடல் சார்ந்த தண்டனையளித்தல் கல்வியமைச்சின் 2005-17ம் இலக்க சுற்றுநிருபம் கூறுகிறது.
ஜக்கிய நாடுகளின் சிறுவர்உரிமைகள் பற்றிய உடன்படிக்கை என்பது உலகிலுள்ள சகல சிறுவர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனமாகும். இது 1989 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ் உடன்படிக்கைக்கு இன்று வயது 101 ஆகும்.இதில் 54 பிரிவுகள் உள்ளன. முதல் 42 பிரிவுகள் சிறுவர் உரிமை பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மீதி 12ம் அந்த அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவேண்டியவதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டவமைப்பினுள் சிறுவர் உரிமைகள்!
இலங்கையில் 1883 ல் முதல்முறையாக சிறுவர்க்கான தண்டனைச்சட்டக் கோவை அறிமுகப்படுத்தப்ப்டது.
பின்பு 1995 இலும் 1998இலும் திருத்தம் செய்யப்பட்டது.
z
சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக் கெதிரான வன்முறைகளை
இல்லாதொழிக்க முடியும். ஓவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.;; நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துக்களாக கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது பல்வேறு சட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. சகல பொலிஸ் திணைக்களங்களிலும் இயங்கும் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட அழைப்பு இலக்கம் 1929 போன்ற பலரிடமும் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு பொதுமக்கள் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கும் பட்சத்தில் சிறுவர் உரிமை மீறல்களை இல்லாதொழிக்கலாம்.a

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More