Aram News1st
Tamil News Website from Sri Lanka

கொலை செய்யப்பட்ட சுவாதி முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்தார்- தொல்.திருமாவளவன்

0 25

swathi

கொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியர் சுவாதி, ரம்ஜானுக்கு நோன்பு இருந்தவர் என்றும், விரைவில் அவர் முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்ததாகவும், இந்த கோணத்தில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கைவிடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் தினம் ஒரு திருப்பம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது. ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்று போலீசார் கூறியிருந்த நிலையில், திடீரென, சுவாதிக்கு நெருக்கமான நண்பர், முகமது பிலால் சித்திக் என்பவரிடம் போலீசார் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். பிலால் செல்போன் நம்பருக்கு சுவாதி அதிக மெசேஜ்கள் அனுப்பியிருந்ததாகவும், அதில் தன்னை ஒரு நபர் பின் தொடர்வதாக சுவாதி கூறியிருந்ததாகவும், அதுபற்றி முகமது பிலால் சித்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது. மேலும், ராம்குமாரை, பிலால் அடையாளம் காட்டியதாகவும் கூறப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையின் போது சுவாதி நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, ரத்தக் கரை படிந்த சட்டை ராம்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது தற்போது மறுக்கப்படுகிறது. இதில் எது உண்மை?

ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக்கில் நட்பாகி, ராம்குமார் நெல்லையில் இருந்து சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராம்குமாரின் பேஸ்புக்கில் 2014ம் ஆண்டுக்குப் பிறகு எதுவுமே பதிவாகவில்லை. சுவாதி பற்றிய பதிவு எதுவும் இல்லை. சுவாதி கொல்லப்பட்டவுடன் சுவாதி என்று ராம்குமார் தனது பேஸ்புக்கில் சர்ச் செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. நன்கு அறிந்த ஒருவரைப் பற்றி அவர் ஏன் சர்ச் செய்ய வேண்டும்?

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் காதல் இருந்ததாக பேஸ்புக்கில் எந்த தகவலும் இல்லை. சுவாதிக்கும் பிலாலுக்கும் நட்பு இருந்தது என்றும், சுவாதி கொலைக்குப் பின்னால் பிலால் மாலிக் என்பவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதன் பின்னணி என்ன? உடனடியாக பிலால் மாலிக்கை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தாதது ஏன்?
திருமாவளவன் வெளியிட்டுள்ள இந்த பரபரப்பு விவகாரங்கள் தீப்பிடித்து எரியுமா, அல்லது புஸ்வானமாகுமா என்பதை அடுத்தகட்ட போலீஸ் விசாரணைகள் உலகுக்கு காண்பிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More