The news is by your side.

கிரிக்கெட்டின் 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 புகைப்படங்கள்…

0 28

best_pic_2015_006

கிரிக்கெட்டின் முக்கிய ஆண்டான இந்த 2015ம் ஆண்டு இன்னும் 5 நாட்களுடன் முடிவடைகிறது.
இந்த வருடம் கிரிக்கெட்டில் உலகக்கிண்ணம், ஆஷஸ் தொடர், தென் ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் (72 நாட்கள்) இந்திய சுற்றுப்பயணம், இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணம், பகல்- இரவு டெஸ்ட் என பல நிகழ்வுகள் அரங்கேறின.

இவற்றில் சில புகைப்படங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். அவற்றை பற்றி பார்க்கலாம்.

2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 புகைப்படங்கள்:-

1) மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு பிறகு சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றது.

best_pic_2015_001

2) உலகக்கிண்ணத் தொடரில் சிட்னி மைதானத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 66 பந்தில் 162 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
best_pic_2015_002

3) உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் ஸ்டெய்ன் வீசிய கடைசி ஓவரின் 5வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய எலியாட் நியூசிலாந்துக்கு வெற்றி தேடித் தந்தார். அப்போது வெற்றியை கொண்டாடாமல் விரக்தியில் தரையில் படுத்திருந்த ஸ்டெய்னை கைகொடுத்து தூக்கி விட்டார்.

best_pic_2015_003

4) உலகக்கிண்ண காலிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றுப் போனதால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மொர்னே மோர்கல் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.

best_pic_2015_004

5) இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியைக் கொண்டாடிய வங்கதேச வீரர்கள்.
best_pic_2015_005

6) இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் குமார் சங்கக்காரா.
best_pic_2015_006

7) 15 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து அவுஸ்திரேலியாவின் 8 விக்கெட்டுகளை அள்ளிய பிராட். அந்த இன்னிங்சில் அவுஸ்திரேலியா 60 ஓட்டங்களுக்கு சுருண்டது.

best_pic_2015_007

8) ஜிம்பாப்வேயில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற ஆப்கான் அணியை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்.
best_pic_2015_008

9) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த பகல்- இரவு டெஸ்ட் போட்டி. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடந்த பகல்- இரவு டெஸ்டில் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா மோதியது.

best_pic_2015_009

10) நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 160.4 கி.மீ வேகத்தில் பந்துவீசி மிரட்டினார்

best_pic_2015_010

Leave A Reply

Your email address will not be published.