The news is by your side.

காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்க வேண்டுமா?

0 30

Celebs-love-marriage-Prospects-main

பொது­வாக வாழ்க்கை என்­பது நமக்கு பிடித்­த­வாறு அமைந்தால், அதை விட பெரிய பாக்­கியம் எதுவும் இல்லை. அப்­படி தனக்கு வாழ்க்­கைத்­து­ணை­யாக பெண்கள் தங்­க­ளுக்கு பிடித்­த­வரை தேர்ந்­தெ­டுத்தால், அதனை பெற்­றோர்கள் மறுக்­கி­றார்கள். இதனால் பலர் மனம் உடைந்து போகின்­றனர். சிலர் தங்கள் வாழ்க்­கை­யையே முடித்­துக்­கொள்­கின்­றனர். மேலும் பலர் மனதை கல்­லாக்கி, வேறொ­ரு­வரை திரு­மணம் செய்து கொண்டு, பிடிக்­காத வாழ்க்கை வாழ்­கின்­றனர். உண்­மை­யி­லேயே பெற்­றோர்கள் காத­லுக்கு எதி­ரிகள் அல்ல.
பெற்­றோர்­க­ளிடம் தம்முள் இருக்கும் காதலைப் பற்றி வெளிப்­ப­டை­யா­கவும், புரி­யு­மாறும் பேசி னால், நிச்­சயம் பெற்­றோர்­க­ளிடம் காதல் திரு­ம­ணத்­திற்கு சம்­மதம் வாங்­கி­வி­டலாம். பெற்­றோர்கள் சம்­ம­தத்­துடன் காதல் திரு­மணம் செய்து கொள்ள சில வழி­மு­றைகள் உள்­ளன.
அவற்றை பின்­பற்றி பெற்றோர் சம்­ம­தத்­துடன் திரு­மணம் செய்து கொள்­ளுங்கள். பெற்­றோர்­க­ளிடம் உங்கள் காத­லரை பற்றி அறி­முகம் செய்யும் போது ஒவ்­வொ­ரு­வரும் மனதில் கொள்ள வேண்­டி­யது என்­ன­வென்றால்,
உங்கள் காத­லரைப் பற்­றியும், அவர் உங்­களை எப்­ப­டி­யெல்லாம் சந்­தோ­ஷ­மாக வைத்துக் கொள்வார் என்­ப­தையும், இரு­வரும் ஒரு­வரை ஒருவர் எவ்­வ­ளவு நேசிக்கி­றீர்கள் என்­ப­தையும் தெளி­வாக பெற்­றோர்­க­ளிடம் சொல்ல வேண்டும்.
நிச்­சயம் பெற்­றோர்கள் இதனால் முதலில் அதிக அளவில் கோப­ம­டை­யலாம். இதனால் அவர்கள் உங்கள் மனதை மாற்­று­வ­தற்கு, உங்கள் காத­லரைப் பற்றி பல­வாறு சொல்­வார்கள். அப்­படி சொல்லும் போது, நீங்கள் கோபப்­ப­டாமல், அவர்கள் சொல்­வதை காது கொடுத்து கேட்க வேண்டும். இதனால் அவர்­க­ளது மனதில் உள்ள எண்­ணத்தை நன்கு புரிந்து கொண்டு, பின் அதற்­கேற்­ற­வாறு பேசி, சம்­மதம் வாங்க முடியும்.
சிலர் பெற்­றோர்­க­ளிடம் தங்கள் காதலை பற்றி சொல்லும் போது, பெற்­றோர்கள் ஒப்புக் கொள்­ள­வில்லை என்றால், மரி­யாதை இல்­லாமல் நடந்து கொள்­வார்கள். ஆனால் இப்­படி நடப்­பதால் எந்தப் பயனும் கிடைக்­கப்­போ­வ­தில்லை.
ஆகவே காதலைப் பற்றி சொல்லும் போது, பெற்­றோர்­க­ளுக்கு மதிப்பு கொடுத்து, உங்கள் சம்­மதம் இல்­லாமல் நான் எதையும் செய்­ய­மாட்டேன் என்ற நம்­பிக்­கையை அவர்­க­ளுக்கு கொடுத்து நடந்து கொண்டால்,பதி­லுக்கு அவர்­களும் சந்­தோ­ஷப்­பட்டு, திரு­ம­ணத்­திற்கு ஒப்புக் கொள்ள வாய்ப்பு உள்­ளது. முக்­கி­ய­மாக காதலை பெற்­றோர்­க­ளிடம் சொல்லும் போது பொறு­மையை கையாள வேண்டும். காதல் வேகத்தில் பொறு­மையை இழந்தால், பின் காத­லையும் இழக்க நேரிடும்.
ஆகவே நீங்கள் பெற்­றோர்­க­ளிடம் காதலை சொல்லும் போது அவர்கள் அடித்­தாலும் சரி, உங்­க­ளிடம் பேசாமல் இருந்­தாலும் சரி, சற்று பொறு­மை­யாக இருக்க வேண்டும். ஏனெனில் பெற்­றோர்கள் நீங்கள் எடுத்த முடிவு சரியா என்று யோசிக்க அவர்­க­ளுக்கு சிறிது காலம் தேவைப்­படும்.
அது­வரை நீங்கள் பொறு­மை­யாக இருக்க வேண்டும். அதற்­காக பெற்­றோர்­களை வற்­பு­றுத்த வேண்டாம். இதனால் அவர்களது கோபம் மட்டும் தான் அதிகரிக்குமே தவிர, நீங்கள் சொல்லும் வார்த்தை அவர்களது மனதை எட்டாது. ஆகவே அவர்களை வற்புறுத்தாமல், அவர்களிடம் மன தில் இருக்கும் அனைத்தையும் பேசிவிட்டு, அமை தியாக இருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.