Aram News1st
Tamil News Website from Sri Lanka

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனை…

0 31

13886966_1578279419141441_8452971308751438066_n

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி அண்மையில் திருகோணமலை கந்தளாய் மைதானத்தில் இடம்பெற்றபோது கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் 20 தங்கப்பதக்கங்களையும் , 4 வெள்ளிப்பதக்கங்களையும் , 2 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

14 நிகழ்சிகளில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்களில் 21 வயதுக்குட்பட்ட 4 x 400 மீறறர் அஞ்சலோட்டப் போட்டியில் 3.41 செக்கன்கள் ஓடி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண சாதனையான 3.46 செக்கன்களை முறியடித்துள்ளதுடன் , 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 44.6 செக்கன்கள் ஓடி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண சாதனையான 47.3 செக்கன்களை முறியடித்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட ஏ.ஜி.எம்.மஸ்புத் , ஜே.எம்.இன்ஸாப் , எம்.யு.ஏ.ஸம்லி , எம்.ஏ.எம்.றஸ்பாஸ் ஆகியோர் இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டதுடன் இதே வயதுப் பிரிவில் ஜே.எம்.இன்ஸாப் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 11.3 செக்கன்கள் ஓடி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண மட்ட சாதனையான 11.4 செக்கன்களை முறியடித்ததுடன் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 23.1 செக்கன்கள் ஓடி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண மட்ட சாதனையான 23.3 செக்கன்களை முறியடித்து தங்கப் பதக்கங்களையும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 ஆம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் ஏ.ஜி.எம்.மஸ்புத் 100 மீற்றர் மற்றும் 200 மீறறர் ஓட்டப்போட்டிகளில் இரண்டாம் இடங்களைப் பெற்று வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார். எம்.எப்.எம்.சனா என்ற மாணவன் 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் 3 ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

19 வயதுப்பிரிவில் 4 x 100 மீற்றர் அஞ்சலோட்ட நிகழ்வில் 46.5 செக்கன்கள் ஓடி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண மட்ட சாதனையான 47.0 செக்கன்களை முறியடித்துள்ளனர் இதில் கலந்து கொண்ட ஏ.டபிள்யு.எம்.ஆஸாத்கான் , ஏ.ஜே.எம்.ஸாபித் , ஏ.எல்.சஜீத் அஹமட் , ஏ.என்.எம்.ஆபாக் ஆகியோர் தங்கப்பதக்கங்களையும் , ஏ.டபிள்யு.எம்.ஆஸாத்கான் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 23.1 செக்கன்கள் ஓடி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண மட்ட சாதனையான 23.6 செக்கன்களை முறியடித்து தங்கப்பதக்கத்தையும் , 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் , நீளம் பாய்தல் போட்டியில் 3 ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
13882389_1575325289436854_8498622514168666458_n

c
15 வயதுக்குட்பட்ட பிரிவில் 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 51.85 செக்கன்கள் ஓடி ஏற்கவே ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண மட்ட சாதனையான 53.3 செக்கன்களை முறியடித்துள்ளனர். இதில் கலந்து கொண்ட எம்.ஆர்.எம்.லைஸ் , எம்.ஜே.எம்.அஸ்ஜித் , ஏ.என்.எம்.அன்பாஸ் , ஏ.ஏ.சஜீர் ஆகியோர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

கிழக்கு மாகாண மட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்ட போட்டியில் இக்கல்லூரி சம்பியன்களாகவும் , ஆண்கள் பிரிவில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற கல்லூரியாகவும் தெரிவு செய்யப்பட்டு அதற்கான சம்பியன் கிண்ணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் , இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி.முஜீன் , விளையாட்டுப் பொறுப்பாசிரியர் ஏ.எம்.அப்ராஜ் ரிலா உள்ளிட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் பயிற்றுவிப்பாளர் முஹம்மட் றியால் , ஆகியோருக்கு கல்லூரி அதிபர் பீ.எம்.எம்பதுறுதீன் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பழைய மாணவர் சங்க தாய்ச்சங்க மற்றும் கொழும்புக் கிளை உறுப்பினர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

sports_sp_2016_2-300x200

sports_sp_2016_3-300x200

sports_sp_2016_4-300x200

talent

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More