Aram News1st
Tamil News Website from Sri Lanka

கலைஞர் நளீம் லதீப் இன் கலைக் கண்காட்சி எதிர்வரும் ஜூன் 6ம் 7ம் திகதிகளில்

0 25

nm3
உண்மையில் இவ்வுலகம் கலையின் இருப்பிடமே அந்த அற்புத கலையே இவ்வுலகை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறது. இது இறைவனால் வழங்கப்படும் ஓர் அற்புதக் கலையே!
என்னைப் பொறுத்தவறையில் நான் ஒவ்வொரு மனிதனையும் கலையுணர்வுடனேயே பார்க்கிறேன். ஒவ்வொரு உலகப்பொருளும்,உயிர்களும்,உணர்வுகளும் கூட ஒரு கலையே! இதுவே இவ்வுலகை பசுமைப்படுத்துகிறது எனக் கூறுகிறார்

கல்முனை மாநகரம் சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்ட அறம் சஞ்சிகையின் ஆசிரியரும்,எழுத்தாளரும்,நவீனதுறை ஓவியரும், கலைஞரும்,அரசியல் விஞ்ஞான துறை பட்டதாரியுமான ஆசிரியர் நளீம் லதீப் 10 வகுப்பறைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களுடன் ஒரு தனி மனித முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட கலைக் கண்காட்சி எதிர்வரும் ஜூன் 6ம் 7ம் திகதிகளில் சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள கமு/ மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் Dream Tech’s Art Expo 2015 எனும் அமைப்பினால் மிக விமர்சையான முறையில் இடம்பெறவுள்ளது.

இக் கண்காட்சியின் கதாநாயகன் நளீம் லதீப் இக்கலைப் பொருட்கலைப்பற்றியும் தமது ஆற்றலின் வெளிப்பாடுகள் பற்றியும் மிகவும் சுவாரஸ்யமாக விளக்கமளிக்கிறார்…

எனது சிறு பாடசாலை பருவம் முதல் இற்றைவரை இற்றை வரை எனக்கு மிகவும் ஆர்வம் ஓவியம் வரைவதிலேயே இருந்தது ஆனால் அது தற்போது கலையாக உருவெடுத்து மிகப் பெரும் கண்காட்சியாக 3 கண்காட்சிகளை எனது சொந்த ஊரில் மட்டும் நடாத்தியுள்ளேன் இது தவிர சம்மாந்துறை,குளனி,மருதமுனை போன்ற பகுதிகளிலும் எனது கண்காட்சியை நடாத்தியுள்ளேன் தற்போது பிரமாண்டமான முறையில் ஐந்து பிரிவுகளாக ஏற்பாடு செய்துள்ளேன். என்னால் வரையப்பட்ட பென்சிலை மாத்திரம் பயன் படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள்,என்னால் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள்,என்னால் சேகரிக்கப்பட்டுள்ள முத்திரைகள்,மிகப்பழமையான இலங்கை மற்றும் வெளிநாட்டு நாணயங்கள்,முன்னோர் பொருட்கள் உயிர்ப்பிராணிகள் என மாணவர்களின் கல்வியாற்றலை வளர்க்க ஐந்து பிரிவுகளாக்கி 10 வகுப்பறைகளில் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளேன்.
இக்கலைக்கண்காட்சி வழமை போன்று தாள்களினையோ,அல்லது மட்டைகளினையோ பாவித்து உருவாக்கப் படவில்லை.
மாறாக கழிவுப் பொருட்களான கல்கள்,கடல் பொருட்களான பழமைமிகு சங்குகள்,சிப்பிகள்,கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகள்,மரங்கள்,மரங்களின் கிளைகள்,வேர்கள்,கண்ணாடித்துண்டுகள்,பலதரப்பட்ட கழிவுப் பொருட்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இக்கலைப் பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை இக்கலைப் பொருள்களுக்குள்ள விசேட அம்சமாகும்.
இக் கலைப் பொருட்கள் ஒவ்வொன்றும் பல் வேறுபட்ட கருத்து வேறுபாடுகளினைக் கொண்டுள்ளது.
இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று பல வகையான கலைப் பொருட்களை தேடி அலைந்து திரிந்து சேகரித்தேன் அழகுபடுத்தும் மணிகள்,ரிபன்கள்,அல்ங்காரப் பொருட்கள் ஒட்டுவதற்குத் தேவையான விசேட பசை வகைகளினையும் கடைகளில் வாங்கினேன் இவற்றைப் பயன்படுத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப் பொருட்களினை எனது கற்பனைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினேன்
எனது படப்புக்களில் சமாதானத்தினை மையமாகக் கொண்ட பல படைப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுருந்தன
வன்முறை,அநியாயம்,கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம்,எய்ட்ஸ்,மனிதக் கொடுமைகள் என பல்வேறு பட்ட செய்திகளினையும்,கருத்துக்களினையும் சொல்ல முயன்றிருக்கிறேன்
nm4nm2nm1nmnm8nm7nm6nm5
Recovered_JPEG Digital Camera_1035Recovered_JPEG Digital Camera_1185Recovered_JPEG Digital Camera_1181

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More