The news is by your side.

கனவு பற்றிய தகவல்கள்… (வீடியோ)

0 30

கனவு பற்றிய தகவல்கள்

article-0-15B694BB000005DC-526_634x350

1 . கூடுதலான கனவுகள் 5 தொடக்கம் 20 நிமிடங்கள் வரையே நீடிக்கிறது

2 . முன்னர் நம்பியது போல கறுப்பு வெள்ளையில் மட்டும் கனவு தெரிவதில்லை ..

3 . ஒவ்வொருவரும் ஒரு இரவில் பல தடவைகள் கனவு காண்கிறோம் ஆனால் எமது ஆயுளில் நாம் காணும் கனவு நீளம் 6 வருடங்கள் (கால நேர அளவில் மொத்தமாக )

4 .குருடர்கள் தொடுதல் , நுகர்தல், ஒலி போன்ற வடிவுகளில் கனவை உணர்வார்கள்

5 . REM உறக்க நிலை அல்லாத போது யானை எழுந்து நிற்கும் . REM உறக்க நிலையின் போதே சரிந்து படுக்கும் . (வேறு விலங்குகளும் )

ஆனால் கனவுகள் என்ன ? அன்றாடம் நடைபெறும் விடயங்கள் வழமை போலவே உறக்கத்திலும் மூளை செயல்ப்படுத்துகிறதா ? அல்லது மூளையின் எழுந்தமானமான செயல்ப்பாடா ? அல்லது கனவுகளால் எமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்குமா ? நடக்க இருக்கும் நிகழ்வுக்கு முன்னெச்சரிக்கையா? என பல கேள்விகள் எழும் .

ஆனால் கனவை பற்றி முதன் முதலாக SigmundFreud. என்பவர் ஆராய்ந்த போது கனவுகளாக வெளிப்படுவது யாதெனில் , நாம் எண்ணும் எண்ணங்கள் இந்தசமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் நிறைவேற்றமுடியாவிட்டால் அது கனவுகளாக வெளிப்படும் என கூறியிருந்தார் . அதாவது நாம் ஆசைப்படும் என்ன்னகள் வேறு காரணிகளால் தேக்கி வைக்கும் போது அவை கவவில் வெளிப்படும் என்பது அவர் கருத்து

உதாரணமாக அவர் கூறிய கருத்து ” உதாரணமாக குகையினூடு ரயில் செல்வது போல கனவோ ஒரு பொருள் செல்வது போல கனவோ தோன்றினால் அது உடலுறவை வெளிப்படுத்துவதாகவே இருக்கும் ..

sigmund

“Sometimes, a cigar is just a cigar.” என்று ஒரு கருத்தையும் அவர் முன் வைத்தார் . அதாவது சில வேளைகளில் வேறொரு நிகழ்வை கனவுகள் பிரதிபலிப்பதில்லை . சில வேளைகளில் சிகரெட் என்றால் அது சிகரெட் தான் …

ஆனால் அவரை தொடர்ந்த “Carl Jung ” என்பவர் அவரின் எண்ணங்களை தொடர்ந்தாலும் தனது சொந்த சிந்தனைகளையும் முன் வைத்தார் . அவர் கனவுகளின் மூலம் தேவைகளில் இருந்து உதிக்கிறது எனவும் அவை பிரச்சனைகளை தீர்க்கிறது எனவும் கூறியிருந்தார் .

ஆனால் அவர்களை தொடர்ந்த அலன் ஹோப்சன் போன்றோர் கனவுகள் வெறும் இலத்திரனியல் மாற்றங்களால் உருவாவதே என கூறியிருந்தனர் .

நாம் உறங்கும் போது உறக்கத்தில் 5 படி நிலைகளை கடக்கிறோம் .

article-0-15B694BB000005DC-526_634x350

1 . உறக்கத்தில் இருந்து எழக்கூடிய நிலை .. இலேசான உறக்கம்
2 .ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லல்
3. ஆழ்ந்த உறக்க நிலை

4. 90 நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று 4 ஆவது நிலையை தாண்டி 5 ஆவது நிலைக்கு செல்கிறோம் . அது தான் REM நிலை . அதாவது கண் அசைவு நிலை .

1953 இல் தான் இந்த REM கண்டு பிடிக்கப்பட்டது . கண் அசைவுகள் இடம் பெறும் எனவும் இதன் போது இரத்த அழுத்தம் இருதய துடிப்பு போன்றன அதிகமாக இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது

கனவுகள் இதுவரை யாராலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட முடியாத ஒன்று . விஞ்ஞானிகளின் கருத்துப்படி மூளையில் ஏற்ப்படும் மாற்றங்களே கனவுகளுக்கு காரணம் எனப்படுகிறது . இருந்தாலும் சரியாக இதுவென கணித்து கூற முடியாத இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் விடயம் தான் கனவுகள் .

ஆனால் கனவுகள் பற்றிய தொடர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு கனவும் எமது எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களும் கொண்டன என கண்டறிந்துள்ளனர் .

பொது இடத்தில் ஆடை இல்லாமல் இருத்தல்

நாம் பொது இடங்கள் பாடசாலை அல்லது வேலைத்தளத்தில் இருப்போம் திடீரென ஆடை இல்லாதது போல உணர்வு தோன்றும் .

இவ்வாறான கனவுகள் நாம் எமது நிஜ வாழ்க்கையில் இருந்து எதையாவது மறைக்க முற்ப்படும் போது இவ்வாறான கனவுகள் தோன்றும் .

நாம் அந்த விடையத்தை மறைக்க இன்னும் தயாராகவில்லை என உள் மனதில் எண்ணம் தோன்றும் போதும் அவ்வாறான கனவுகள் தோன்றும் .
dream_about_falling_down

விழுந்துகொண்டிருப்பது போல கனவு ….

ஏதாவது உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு தோன்றும் ,திடீரென எழுவோம் .

ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் போது அதை எம்மால் தடுக்க முடியாவிட்டால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
பாடசாலையில் அல்லது வேலைத்தளத்தில் ஏதாவது தோல்விகள் ஏற்ப்பட்டால் அந்த பிரச்சனையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இவ்வாறான கனவுகள் தோன்றும்.

chase2

யாராவது துரத்துவது போல

என்ன பிரச்சனை என்ன காரணம் என்று தெரியாது . துரத்துவது போல கனவு தோன்றும் .

இது கூடுதலாக நாம் செய்யும் வேலைகளிலும் தங்கி உள்ளது .
உதாரணமாக
கூடுதலாக குடித்தால் , குடிப்பது ஒரு பிரச்சனையாக உங்களை தொடர்ந்து வருகிறது என்பதை குறிப்பிடும் .
article-1286941-08738F81000005DC-652_634x358

பரீட்ச்சை எழுதுவது போல (அல்லதுபரீட்ச்சை இருப்பதை மறந்து போதல் )

ஒரு பரீட்ச்சை இருப்பதை உணர்வீர்கள் . ஆனால் சில நேரங்களில் வகுப்பறையி சென்றடைய முடியாமல் இருக்கும் .

ஒரு சவாலை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போது அதற்க்கு நீங்கள் தயாராகவில்லை என்று உணர்ந்தால் அல்லது அந்த சவாலை புறக்கணித்தால் இவ்வாறான கனவுகள் தோன்றும்.

125

ஓடுவது போல தோன்றல்

ஓடுவது போல தோன்றும் ஆனால் எங்கும் செல்வதோ அல்லது அசைவது போலவோ தோன்றாது .

அதாவது ஒர்றேநேரத்தில் பல வேலைகள் செய்யும் போது எதுவும் கவனத்தில்கொள்ளப்படாத நிலைமைகளில் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
1234

லூசிட் கனவுகள்(Lucid dreaming) – கனவில் கனவு

நீங்க யாரும் நிச்சயம் கனவு காணாம இருந்திருக்க மாட்டீர்கள் . ஆனால் அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எனலாம் . தேஜாவு போல . அதாவது சில நேரங்களில் சில இடங்கள் நிகழ்வுகள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .ஆனால் இவை இரண்டும் அடிக்கடி அனைவருக்கும் நடப்பது . இதுவரை விடை காணாத புதிராய் இருப்பது கனவுகள் தான் . மருத்துவம் ,அறிவியல்,மனோதத்துவம் என பல பக்கங்களில் இருந்தும் விளக்கங்கள் குவிகிறது .

இந்த வகையில் சில கனவுகள் நாம் காணும் போது அவை கனவு தான் என தெரியும் . ஆனால் சில கனவுகள் காணும் போது நிஜமாக நடப்பது போலவே இருக்கும் . அந்த வகை கனவுகள் எளிதில் மறக்க முடியாதது . உங்களால் அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக பார்க்க முடியும் . அது தான் லூசிட் கனவுகள் . லூசிட் கனவுகளை நீங்கள் உணர்ந்து கனவு தான் காண்கிறீர்கள் என உணர்ந்து அனுபவிக்க முடியும் . இன்செப்ஷன் படம் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அதே போல இருப்பது போல தோன்றும் . லூசிட் கனவுகளை எமக்கு ஏற்றது போல அமைத்துக்கொள்ளலாம் .விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் .இதன் முக்கியத்துவத்திட்க்காக ஒரு உதாரணம் சொல்கிறேன்.

இந்த லூசிட் கனவுகள் பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது என்பது உண்மை . நீல் போர் கண்ட கனவு அவருக்கு நோபெல் பரிசை பெற்றுக்கொடுத்தது .எமது கோள்கள் சூரியனை சுற்றுவது போல அணுவை சுற்றி இலத்திரன்கள் காணப்படுவதை கனவிலேயே அவர் கண்டார் .

lucid

இந்த கனவு REM உறக்க நிலையிலேயே வரும் . அதாவது உறக்கத்தின் 5 நிலைகளில் 5 ஆவது நிலையில் . இந்த லூசிட் கனவுகளின் பின்னணியை அலசினால் கொஞ்சம் தெளிவு பிறக்கும் . இது புராதன காலம் தொட்டே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இனத்தவர்கள் பலரிடமும் நிலவிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்தது . அமெரிக்க பழங்குடிகள் இந்த கனவுகளை அவர்கள் இறைவனை அடைய ,தேவதைகள் ,ஆவிகளின் உலகத்துடனான வாசல் போல நினைத்திருந்தனர் .

Aborigines எனப்படும் அவுஸ்திரேலிய மூத்த பழங்குடிகள் உலகின் தோற்றத்தை ஒரு கனவாக தமது குறிப்புகள் ,கதைகளில் குறிப்புட்டுள்ளனர் . சிலர் தாம் காணும் கனவை குறியீடுகளாக வரைந்து வைத்துள்ளனர் .

intro_aborigines_ritual_g

இதிலிருந்து லூசிட் கனவுகள் புதியவை இல்லை என்பது தெரிகிறது ..அரிஸ்டாடில் இந்த கனவுகள் பற்றி எழுதியிருக்கிறார் ஆனால் சரியான பதம் இல்லை .

ஆனால் திபெத்திய புத்தர்கள் பலர் இந்த லூசிட் கனவுகள் போல சிலவை பற்றி நீண்டகாலம் பயிற்சி,ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அது dream yogaa (யோகா )

உங்கள் நிலையை உணர்த்தி எப்போதும் விழிப்புடன் இருக்க மிகவும் உதவும் டிரீம் யோகா . எப்போதும் புத்த சமயத்தில் உள்ள நம்பிக்கை நிஜத்தை உணர்தல் .மாயையில் இருந்து விலகி இருத்தல் . லூசிட் கனவு காண்பவரால் அது கனவு உலகம் என அறிய முடியும் . கனவு காணும் போது அவர்களுக்கு விருப்பமானது போல கனவை ,நிகழ்வுகளை செலுத்தலாம் .

foto1b

டச்சு மனோதத்துவவியலாளர் Frederik van Eeden என்பவரே அதற்க்கான விளக்கங்களுடன் வந்தார் . சாதாரண கனவுகள் தொட்டு கனவில் 9 வகைகள் இருப்பதை கூறினார் .அவர் தனது லூசிட் கனவுகள் பற்றியும் குறித்துள்ளார் .ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பாலியல் உறவு சம்மந்தப்பட்ட கனவுகளே கூடுதலாக வந்துள்ளது .
51PcLF2lOkL._SL1000_

ஆனால் இது பிரசித்தி பெற்றது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மனோதத்துவவியலாளர் Stephen Laberge

என்பவராலே .இவர் தான் கனவுகளை நாம் எமது படைப்புகள் ,கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என கூறியவர் .

நன்றீ
-சிறுவன்

Leave A Reply

Your email address will not be published.