Tamil News Website from Sri Lanka

ஒலிம்பிக் செல்வதற்கான தேவை விளையாட்டு வீரர்களை காட்டிலும் நிர்ருவாகத்தினருக்கே அதிகமுள்ளது-

0 109

unnamed-10
(அஷ்ரப் ஏ சமத்)

சர்வதேச போட்டிகளில் பங்குகொள்வதற்கான ஆர்வம் விளையாட்டு வீரர்களைக் காட்டிலும் நிர்ருவாகத்தினருக்கே அதிகமாகவுள்ளதென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். இன்று (08 ) கண்டி வத்தேகம தென்னகோன் விமலானந்த வித்தியாலயத்தில் நடைப்பெற்ற சேவ்த ஸ்போர்ட்ஸ் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது தற்போதைய நிர்ருவாகத்தினருக்கு ஊடகங்கள் முன்னிலையில் தோன்றி தங்களுடைய தனிப்பட்ட புகழை மேலோங்கச் செய்வதற்கே அதிகளவு ஆர்வமுள்ளதென தெரிவித்தார். விளையாட்டு வீரர்களிற்கு உரிய சந்தர்பங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமெயொழிய தம்முடைய தனிப்பட்ட நலன்கள் மீது அக்கறைக்கொள்ளக்கூடாதெனவும் சுட்டிக்காட்டினார்.

‘நாம் விளையாட்டின் மூலமாக பலவற்றை கற்கின்றோம். நாம் பல நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றோம். அதேப்போன்று எதிரிகளையும் உருவாக்கிக்கொள்கின்றோம். மேலும் வாழ்க்கையினை எதிர்க்கொள்வதற்கும் கற்றுக்கொள்கின்றோம். இன்று வெற்றியீட்டுபவர் நாளை தோற்பார். இன்று தோற்பவர் நாளை வெற்றிக்கொள்வார்.
இது மிகவும் சுதந்திரமான முறையில் எவ்வித கொடுப்பணவுகளும் மேற்கொள்ளாது நாம் பெற்றுக்கொள்கின்ற கல்வியாகும். விளையாட்டினை பார்க்கின்ற நபருக்கும் இந்நிலை தொடர்பாக விளங்காமையே இந்நாடு எதிர்க்கொள்கின்ற துர்பாக்கிய நிலையாகும். விளையாட்டு தொடர்பாக பேச முற்படுகின்றவர்கள் விளையாட்டின் மூலமாக அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்களுக்கேனும் தற்போதைய நிலை தொடர்பாக விளங்காமையே இந்நாடு எதிர்நோக்குகின்ற துர்பாக்கிய நிலையாகும். ஒரு சிலருக்குள்ள மிகப்பெரிய தேவையாதெனில் தங்களுடைய புகைப்படங்களை நாளிதழில் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரசூரிப்பதும் காட்சிப்படுத்துவதாகும். இதுவே இந்நாட்டிலுள்ள விளையாட்டு கலாச்சாரமாகும். யோகனந்தன் ஐயா கூறியதைப் போன்று ஒலிம்பிக் விiயாட்டுப் போட்டிகளிற்கு கலந்துக் கொள்ளும் பொருட்டு 9 வீரர்களே சென்றார்கள் ஆனால் 40 ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இவர்களுடன் சென்றுள்ளார்கள். இது தவறான செயன்முறையாகும். இவ்வதிகாரிகள்; எண்ணிக்கையினை அரைவாசியாக குறைத்து விளையாட்டில் ஈடுப்படுகின்ற பிள்ளைகளை அழைத்துச்சென்று இது தான் ஒலிம்பிக் நடைப்பெறும் முறையென காண்பிப்பார்களேயானால் குறைந்தப்பட்சமாக இக்குழந்தைகளிற்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குக்கொள்வதற்கேனும் சந்தர்பம் கிட்டும். தற்பொழுது அதிகாரிகளின் நண்பர்களே ஒலிம்பிக்கிற்குச் செல்கின்றார்கள். இது ஒலிம்பிக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல.

கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொள்வதற்கு எனக்கு சந்தர்பம் கிட்டியது. அச்சந்தர்பத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவரின் விசேட அறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொள்வதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். இக்கூட்டத்தில் கிரிக்கெட் ஆளுமைகளே கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்குக்கொள்ளவில்லை. முன்னனி கிரிக்கெட் நட்சத்திரங்களே கலந்துக்கொண்டார்கள். இக்கூட்டம் நிறைவடைந்து நான் வெளியே வந்தப் பொழுது கிரிக்கெட் நிர்ருவாகச் சபையின் 20 உறுப்பினர்கள் இங்கிலாந்திற்கு வருகைத்தந்திருந்தார்கள். இது நம் நாட்டு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதை எண்ணி நான் கவலையடைந்தேன். நாம் எப்பொழுதும் எம் நாட்டு பணத்தை மீதப்படுத்தவே முயற்சிக்கின்றோம் . ஏனெனில் இப்பணத்தை பாதுகாத்து எம் குழந்தைகளின் நலன் பொருட்டு நாம் உபயோகிக்க வேண்டும். மாறாக நிர்ருவாகத்தை கைப்பற்றிக் கொள்ளுவதற்கு தேர்தல்களிற்கு உதிவயவர்கள்; அமைச்சரின் சாரதிக்கு ஊடகவியலாளர்களுக்கு வெளிநாடுகள் செல்வதற்கு சந்தர்பம் வழங்கவேண்டியதில்லை. விளையாட்டு தொடர்பாகவே அறிவுருத்த வேண்டும். அதுவே இன்றுள்ள முக்கிய செயற்பாடாகுமென …’ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

சேவ் த ஸ்போர்ட்ஸ் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட சிரேஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு ஆலோசகர் யோகனந்த விஜயசுந்தர கருத்துரைக்கையில் குறிப்பிட்டதாவது

‘ எங்கள் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்குக்கொள்ளும் பொருட்டு 09 வீரர்களே சென்றார்கள். இப்போட்டிகளை காண்பதற்கும் வேறுச் செயற்பாடுகளின் பொருட்டும் 40 பேர் சென்றார்கள். எதிர்வரும் 04 ஆண்டுகளிலும் இந்நிலையே தொடரும். ஒரு சிலச்சந்தர்பங்களில் அக்காலத்தில் நாம் உயிருடனும் இருக்கமாட்டோம். உங்களால் அவற்றை காணவியலும். அரசியல் என்பது கட்சிகளை மட்டும் சார்ந்ததில்லை. விளையாட்டு வீரர்களும் அரசியலில் ஈடுப்படுகின்றார்கள் ‘ என்றார். unnamed-11

Leave A Reply

Your email address will not be published.