The news is by your side.

இன்று பொலிஸ் தினம் பொலிஸ் பற்றிய தகவல்கள்:

0 54

94127358Policநாட்டினதும் நாட்டு மக்களினதும் சட்டம் மற்றும் அமைதி காக்கும் பொறுப்பு இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னர் இக்கடமையைப் பொறுப்பேற்ற அவர்கள் அன்று முதல் இன்று வரை அரச நிறுவன காரியங்களுக்கு அப்பால் சென்று பொதுமக்களுக்கு மிகவும் நெருங்கி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

ஏச்சு, பேச்சு, பாராட்டுக்களுக்கிடையே இரவு விழித்திருந்து வெய்யில் மழை பாராமல் அவர்கள் செய்யும் பணி மிகவும் பெரிதானது.

அபிமான பொலிஸ் சரித்திரத்தின் பாதையை நினைவு கூருவதற்கு இன்றைய தினம் மிக சிறப்பான நாளாகும்.

இங்கு எழுதப்படுவது இலங்கை பொலிஸாரின் 150 வருட சரித்திரமேயாகும்.

இலங்கை பாதுகாப்பு முறை பாண்டுகாபய மன்னன் காலத்திலிருந்து “நகர குத்திக” பதவியிலிருந்தே ஆரம்பித்தது என சரித்தரம் கூறுகின்றது. நகரின் பாதுகாப்பு நகர குத்திகவினுடையதாக இருந்தது.

தமிழர் ஆட்சிக் காலத்தில் சங்கிலி, வேலைக்கார படை போன்ற பாதுகாப்பு படை பற்றி சரித்திரத்தில் கூறப்படுகிறது.

ஆனால் பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாகத் தெரிய வருவதாவது,

1794ம் ஆண்டு பிரித்தானியர்களால் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு ரோந்து கடமைகளுக்காக பெற்ரிக் மயில்ஸ் பெரன்ஸ் பிஸ்கல் அதிகாரியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு சேவையாகும்.

ஆனால் பின்னர் பிரித்தானியர்களுக்கு கிராமிய மட்டத்தில் சட்டத்தை அமுல்படுத்த கிராமிய பிரிவொன்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
358_1441251373_11261108_914163278671259_478023840_o
தோமஸ் மெட்லன்ட் ஆளுநரின் கீழ் 1805ம் ஆண்டு இலங்கை சட்டத் தொகுதிக்கு 1806 இலக்க 6 என்னும் ஒழுங்கு விதியைக் கொண்டு வந்து “பொலிஸ் விதான” என்றும் பதவி உருவாக்கப்பட்டது.

அதன்பின் 1806 இலக்கம் 12 என்னும் ஒழுங்குவிதிக்கு அமைய கிராமிய நிருவாகம் தொடர்பாக “கம்பதி” பதவி உருவாக்கப்பட்டது.

பின்னர் 1806 இலக்கம் 14 எனனும் விசேட சட்டம் கொண்டு வரப்பட்டு புறக்கோட்டை பகுதி 15 வீதிகளாகப் பிரிக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக 28 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டு இரவு பகல் சேவையில் ஈடுபடுத்த பி்ரித்தானியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

பொலிஸ் சேவை இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டாலும் இதனை கொழும்பு நகரை அண்டிய பிரதேசங்களில் நிறுவ அவ்வியம் ஏற்பட்டதால் அதற்காக 1832ம் ஆண்டு றொபர் றோர்ட்ஸ் ஆளுநரின் தலைமையில் ஐந்து பேர்களடங்கிய கமிட்டியொன்று ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதுதான் இலங்கைப் பொலிஸாரின் முதலாவது ஆணைக்குழுவாகும்.

பிரித்தானியர்களின் அதிகாரத்தை பலப்படுத்த அவர்கள் பயிரிட்ட கோப்பி, தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற விவசாயப் பொருளாதார திட்டங்களை பாதுகாப்பது அவர்களின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

அதேவேளை பிரித்தானிய ஆட்சியை இந்நாட்டில் உருவாக்கும் போது உள்ளூர் வாசிகளால் ஏற்படும் எதிர்ப்பை சமாளித்து சூழலை உருவாக்குவதும் அதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

மேற்கூறிய காரணங்களுக்காக பொலிஸ் அமைப்பொன்றின் அவசியம் ஏற்பட்டது.

ஆனால் அவர்களின் நோக்கத்தை பின்பற்றி 1818ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி மற்றும் 1848ம் ஆண்டு மாத்தளை புரட்சி என்பன அவர்கள் பொலிஸ் அமைப்பை ஏற்படுத்த தாமதமானது எனக் கூறலாம்.

இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் நிர்வாகம் கந்த உடரட மற்றும் பஹத ரட என்றும் இரண்டு நிர்வாகத்துக்குள்ளானது.

ஆனால் கோல்புறூக் ஆணைக்குழு மூலம் நிர்வாகம் இரண்டும் ஒரு நிர்வாகமாக்கப்பட்டது.

ஆனால் 1864ம் ஆண்டு உத்துவங்கந்த சரதியலின் தலைமையில் ஏற்பட்ட புரட்சியை அடக்க பிரித்தானிய பொலிஸாருக்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதியில் 1865 இலக்கம் 16 என்னும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் அகில இலங்கைக்கும் ஒரே அமைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட பொலிஸ் சேவையை நிறுவ பிரித்தானியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட பொலிஸ் சேவையை மேற்கொள்ள பிரித்தானியர்களால் இந்தியாவின் இராஜஸ்தான் பிராந்தியத்தில் ரத்னகிரி ரேன்ஜர்ஸ் பிரதேசத்தில் கடமையாற்றிய ஸ்ரீமத் ஜோர்ஜ் வில்லியம் செம்பல் 1866ம் ஆண்டு இலங்கைக்கு அழைத்து வந்து அவரை பொலிஸ் சேவையின் தலைவராக பொலிஸ் சுப்ரிண்டன் என்னும் பதவிக்கு நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால் பொலிஸ் கட்டளைச் சட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட முதலாவது திருத்தத்தின் கீழ் 1867ம் ஆண்டு பொலிஸ் சுப்ரின்டன் என்னும் பதவி “பொலிஸ் மா அதிபர்” என மாற்றம் செய்யப்பட்டது.

இதன்படி ஜீ. டபிள்யூ. ஆர். கெம்பல் இலங்கையின் முதலாவது பொலிஸ்மாஅதிபராக நியமிக்கப்பட்டார்.

24 வருடம் சேவையாற்றிய கெம்பல் வெளிநாடு சென்றதன் பின்னர் இரண்டாவது பொலிஸ் மா அதிபராக எம். ஆர். சோன்டர்ஸ் நியமிக்கப்பட்டார்.

அப்போது இலங்கையில் மக்கள் தொகை இரண்டு மில்லியனாகும்.

ஆரம்பத்தில் 520 பொலிஸ் அதிகாரிகள் இருந்தார்கள். பொலிஸ் நிலையம் 44 ஆகும்.

ஆனால் கிரமமாக விரிவுபடுத்தப்பட்டு 1870ல் குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) பொலிஸ் மா அதிபர் எட்வர்ட் டேவின்டின் தலைமையில் பம்பலப்பிட்டியில் ஆறரை ஏக்கரில் பொலிஸ் மைதானமும் அமைக்கப்பட்டது.

பிரித்தானிய பொலிஸ் மா அதிபர்களின் நிர்வாகக் காலத்தில் குறிப்பாக 1913லிருந்து 1937 வரையான காலப் பகுதியில் இந்நாட்டில் நிர்வாகம் செய்த ஸ்ரீமத் ஹர்பர்ட் லெயாட் டவ்பிகின் காலத்தை மறக்க முடியாது.
ploice sl
அது பொலிஸ் வரலாற்றில் பொன்மயமான காலமாகும்.

அவர் காலத்தில் முதல் முறையாக பொலிஸ் மா அதிபரின் உதவிக்காக பதில் பொலிஸ் மா அதிபர் பதவி, தந்தி மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் புனர் நிர்மாணம், மருதானை பொலிஸ் தலைமையகம் மற்றும் கட்டிடங்கள் நி்ரமாணம், டெபோ பொலிஸ் சேவையை ஆரம்பித்தல் 1905ம் ஆண்டு லொண்டன் பொலிஸ் அதிபரால் புறக்கோட்டை குமார வீதியில் அமைக்கப்பட்ட முதலாவது பொலிஸ் பயிற்சி கல்லூரி, 1913ம் ஆண்டு பம்லப்பிட்டிக்கும் பின்னர் களுத்துறைக்கும் கொண்டு செல்லல் போன்ற விசேட காரியங்கள் பல நடைபெற்றன.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை 1947ம் ஆண்டில் எழுதப்பட்டது.

வடமத்திய மாகாண அரச பிரதிநிதியாகக் கடமையாற்றிய ஸ்ரீமத் ரிச்சர்ட் அலுவிஹார முதலாவது இலங்கை பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதாகும்.

பெண்கள் பொலிஸ் சேவை 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது பெண் பொலிஸ் அதிகாரியாக ஹேமா குணவர்தன பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சரித்திரத்தில் முதல் முறையாகவும் இறுதியாகவும் பொலிஸ் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டது. 1959ம்ஆண்டு எம். டபிள்யூ. எப். அபேகோனாகும்.

இப்படி கிரமமாக விரிவு படுத்தப்பட்ட பொலிஸ் சேவையில் அதிகாரிகளுக்கு நாட்டைப் பாதுகாக்க தமது உயிரை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

இவ்வாறு வீர மரணம் அடைந்த வீரர்களில் முதலாவது உயிரிழப்பு 1964ம் ஆண்டு 21ம் திகதியே நடைபெற்றது.

சரதியலின் சகாவான மம்மலே மரிக்காரால் கொன்ஸ்டபிள் சபான் சுட்டுக்கொல்லப்பட்டதே அச்சம்பவமாகும்.

முப்பது வருடங்கள் கொழுந்து விட்டெரிந்த யுத்தத்தின் போதும் முதல் பலி பொலிஸ் கான்ஸ்டபிள் கருணாநிதி 3041 ஆகும்.

1978 பெப்ரவரி 18ம் திகதி காங்கேசன்துறையில் நடந்த பயங்கரவாத தாக்கதலிலேயே அவர் கொல்லப்பட்டார்.

அன்றிலிருந்து இன்று வரை தேசிய பாதுகாப்புக் கடடையின் போது பொலிஸ் அதிகாரிகள் 3110 பேர் உயிர் நீத்துள்ளார்கள்.

பொலிஸ் சரித்திரத்தில் அவ்வாறு எழுதப்படும் போது தற்பொது 442 பொலிஸ் நிலையங்களில் 84000 க்கும் அதிகமான அதிகாரிகளைக் கொண்ட நிறுவனமாக சூழல் பாதுகாப்பு தொல்பொருள், தேசிய உரிமை, அரச நிதி பாதுகாப்பு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றம், உல்லாசப் பயண சேவை போன்ற பாரிய பரவலாக தங்களது கடமைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தின் ஊடாக குற்ற விசாரணைகளை ஒழுங்குபடுத்தல், கைவிரல் அடையாள முறை பொலிஸ் நிலைய மட்டத்துக்கு விரிவுபடுத்தல், முகம் தொடர்பாக குற்றங்களை அறிந்துகொள்ளும் முறை, குற்றம் நடந்த இடத்தை பரிசோதிக்கும் முறையை விரிவுபடுத்துதல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் காரியமாற்றும் சிறப்பு அதிரடிப்படையை பிராந்திய மட்ட முகாம்களை அமைத்து இலங்கை பொலிஸின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பது எம் இனத்தின் அதிர்ஷ்டமாகும்.65792 இலங்கை காவற்துறை
இலங்கையின் தேசிய காவற்துறையே நாட்டின் சட்டவொழுங்கைப் பாதுகாக்கின்ற பிரதான அரச அமைப்பாகும். இதன் பணிகளாக நாட்டின் உட்பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு என்பனவேயிருந்த போதினும்கூட, இது இலங்கையின் பாதுகாப்பு படைகளின் உள்ளிணைந்த அங்கமாகக் காணப்படுகின்றது. மேலும் தேசிய காவற்துறையின் விசேடமாகப் பயிற்றப்பட்ட அதிரடிப்படையினர், முப்படைகளுடன் கூட்டு நடவடிக்கைகளிலும் அனேகமாக ஈடுபடுத்தப்படுகினறனர்.

இலங்கையின் காவற்துறை வரலாறு மிகவும் பழைமை வாய்ந்ததாகக் காணப்பட்ட போதினும்கூட, நவீன அம்சங்கள் பொருந்திய காவற்துறையானது ஒல்லாந்தருடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெவ்வேறு கூறுகளாகவிருந்த காவற்துறை 1858 இல் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1866 இல் இலங்கை காவற் திணைக்களம் உருவாக்கப்பட்டது.

1858 இல் இருந்து பெரும் மாற்றம் ஏதுமில்லாதிருந்த காவற்துறை 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 17வது அரசியலமைப்பு திருத்தசட்டத்தின் மூலம் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை தேசிய காவற்துறை இயங்குகின்றபோதிலும், அதன் நாளாந்த பணிகளை நடாத்தி செல்கின்றவர் காவல்துறை மாஅதிபர் ஆவார். இவர் காவற்துறை ஆணைக்குழுவால் நியமிக்கப்படாத போதும் அவரின் அனைத்து அதிகாரங்களும், தேசிய காவற்துறை ஆணைக்குழுவிலிருந்தே பெறப்படுகின்றன.

பாதுகாப்பு படைகள்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் பாதுகாப்பு படைகள்

இலங்கையின் முப்படைகளாவன இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை ஆகும். இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இலங்கை அரசியல்யாப்பின் கீழ் சனாதிபதியே முப்படை தளபதியாகக் கொள்ளப்படுகிறார். சுதந்திரமடைந்தபோது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் தற்போது அது 2% ஆகக் குறைந்துள்ளது.

1970ம் ஆண்டு வரை சம்பிரதாயபூர்வமாக இருந்த படைகள், 1971ம் ஆண்டு இடம்பெற்ற மார்சிச புரட்சியைத் தொடர்ந்து வலுப்பெறத்தொடங்கின. பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு போர், இனப்பிரச்சனை காரணமாகத் தற்போது இவை உலகில் அதிக போர் பயிற்சி பெற்ற படைகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.

இலங்கை படைபலம் சம்பந்தமான சில புள்ளிவிபரங்கள்:

இலங்கை இராணுவம் 90,000
இலங்கை கடற்படை 20,000
இலங்கை விமானப்படை 10,000

Leave A Reply

Your email address will not be published.