Aram News1st
Tamil News Website from Sri Lanka

இனக்கலவர சூழ்ச்சியின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் நிறைவேறாது

0 29

sufair(எம்.ஜே .எம்.சஜீத்)

இனங்களுக்கு மத்தியில் நிலவும் சமாதானத்தை சீர்குழைப்பதற்காக ஒரு சில குழுக்கள் வீதியில் இறங்கி மூவின சமூகங்களுக்கும் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மீண்டுமொரு இனக்கலவரத்தை இந்த நாட்டிலே ஏற்படுத்துவதற்கு முயற்ச்சிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 66வது சபை அமர்வு (29) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், கிருஷ்ணப்பிள்ளை ஆகியோரினால் நமது நாட்டில் சமாதானத்தையும், சகவாழ்வினையும் ஏற்படுத்தும் முகமாக கொண்டுவரப்பட்ட ஆட்சியில் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் அதிகாரத்திலிருந்தவர்கள் சர்வதிகாரப் போக்கை கொண்டிருந்த காலகட்டத்தில் எந்தவொரு மதத்தினுயைட மத குருவும் அந்த சர்வதிகார அரசைக் கண்டிக்கின்ற நிலையில் இருக்கவில்லை அவ்வாறான சூழ்நிலையில் தான் இந்த நாட்டிலே இருந்த பௌத்த மத குருவான சோபித தேரர் அவர்கள் இந்நாட்டிலுள்ள மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் சிறந்ததோர் ஆட்சியின் கீழ் வாழ வேண்டும் என்பதற்காக இந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு தன்னை அர்ப்பனித்து செயற்பட்டார்.

அவர் தற்போது எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அவர் செய்த தியாகம், பங்களிப்புக்கள் உட்பட கடந்த சர்வதிகார ஆட்சிக் காலத்தில் துனிந்து நின்று எழுப்பிய குரல் என்பன இன்று நல்லாட்சியில் மூவின சமூகங்களும் இணைந்து ஆட்சி செய்கின்ற ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அப்படியான நல்ல பௌத்த மத குருக்கள் வாழுகின்ற இந்த நாட்டில் மூவின சமூகங்களுக்கும் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு இனவாதக் குழுக்கள் முயற்சிக்கின்றன. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு சில இனவாதிகள் கோரிய போது எனது உயிர் இருக்கும் வரையில் அப்பள்ளியை அகற்றவிடமாட்டேன் என அப்பகுதியைச் சோர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஜனகபண்டார தென்னக்கோன் கூறினார். அப்படியன நல்ல ஜனநாயக்க கருத்துள்ள சிங்கள அரசியல் தலைவர்களுமே் இந்த நாட்டிலே உள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையல் ஒருசில சிங்கள இனவாதக் குழுக்கள் மாத்திரமல்ல எல்லா இனங்கள் மத்தியிலும் சில குழுக்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஆட்சியிலே அதிகாரம் இல்லாமல் போனாலும்இந்த நாட்டிலே ஒரு குழப்பம் ஏற்பட வேண்டும் இங்கு ஒரு சதிப்புரட்சி இடம்பெற வேண்டும். அதனாலே மீண்டும் இந்த நாட்டை தாங்கள் ஆளவேண்டும் என்கின்ற பின்புலங்கள் தற்போது காணப்படுகிறது. அவர்கள் செய்கின்ற இவ்வாறான சூழ்ச்சியின் காரணமாக அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் நிறைவேறாது.

குறிப்பாக இந்த நாட்டிலே இனவாதத்தை தூண்டும் குழுக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்டார்கள். அத்தேர்தல்களின் போது ஒரு சொற்ப வாக்கினையே பெற்றுக்கொண்டனர். எனவே இனவாதக் குழுக்களை பெரும்பான்மையின சிங்கள சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை. விசேடமாக இந்த நாட்டிலே வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ விரும்புகின்றனர். கடந்த 30வருட யுத்தத்தில் இந்நாடிலுள்ள மூவின சமூகங்களும் எதிர்நோக்கிய இழப்புக்களை மீட்டுப்பார்க்கும் போது மீண்டுமொரு யுத்தத்தை என்னிப்பார்க்க முடியாதுள்ளது.

ஆகவே இந்த நல்ல சூழ்நிலையில் இந்தநாட்டிலே சட்டத்தை நிலைநாட்டுகின்ற பொலிசார் பக்கச்சார்பின்றி சட்டத்திற்கு புறம்பான சம்பங்கள் நடைபெறுகின்ற போது சட்டத்தினை அமுல்ப்படுத்தி இனவாத செயற்பாடுகளை அடக்குவதன் மூலம் இந்த நாட்டில் ஒரு பிரச்சிணைகளுமின்றி மூவின மக்களும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More