Aram News1st
Tamil News Website from Sri Lanka

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்….

0 61

dheeraj-dhoopar

அழகு குறிப்புகள் என்றாலே அது பெண்களுக்குத்தானா? ஆண்களுக்கு இல்லையா?

பெண்களுக்கு மட்டுமல்ல…ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் இருக்கின்றன.

அவற்றைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நம்மில் பலர் அழகான தோற்றத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறோம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களின் மனதில் அழகான ஹீரோவாக நினைக்கிறோம்.

இது மனித இயல்பு. இத்தகைய எண்ணங்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் முதிய தோற்றத்தை விரைவில் அடைவதில்லை.

எனினும் ஆண்களில் சிலர் குறைந்த வயதிலேயே வயதான தோற்றத்தைப் பெற்றுவிடுவார்கள். இதற்கு என்ன காரணம்?

இதற்குக் காரணம் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் தான். கடந்த பதிவில் சிகரெட் பிடிப்பதினால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். படிக்காதவர்கள் இந்தப் பதிவைப் படித்துவிட்டு தொடரலாம்.

வயதான தோற்றம் வராமல் தடுப்பது எப்படி?
பெண்களைவிட ஆண்களுக்கு சருமம் சற்று கடினமாக இருக்கும்.
menfacila

பொதுவாகவே இதனால் ஆண்களுக்கு வயது ஏறினாலும் முதிய தோற்றம் தோன்றுவது பெண்களை விட ஆண்களுக்கு சில ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போதெல்லாம் பெண்களைவிட ஆண்களே விரைவில் முதியத் தோற்றதைப் பெற்றுவிடுகிறார்கள்.

காரணம் அவர்கள் உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆண்கள் அப்படி அல்ல. உடல் பராமரிப்பில் அதிக அக்கறையில்லாமல் இருப்பார்கள்.

ஆண்களில் ஒரு சிலருக்கு வயதான தோற்றம் சீக்கரமே , அதாவது குறைந்த வயதிலேயே வந்துவிடுவது உண்டு.

பொதுவாக வயதை வெளிப்படுத்துவது தோல்தான். தோலில் ஏற்படும் சுருக்கமே வயதான தோற்றத்தை காட்டிக்கொடுக்கும். எனவே தோல் பாதுகாப்பில் நம் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

தோலை கவனமாகவும், சீராகவும் பராமரித்தாலே போதும். முதிய தோற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும். அதிக எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வதால், காற்றில் உள்ள மாசுக்களால் தான் சருமம் அதிகம் பாதிக்கப்படுகிறது.

இதனை தடுக்க Anti Aging cream-களை பயன்படுத்தலாம். மற்றுமொரு எளிய வழி அதிகம் தண்ணீர் குடிப்பது. நிறைய தண்ணீர் குடித்தால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் தவிர்க்கப்படுகிறது. தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிந்துகொள்ள ‘சும்மா ‘கிர்ர்ன்னு’ தண்ணி குடிங்கபதிவை படிக்கவும்.

தோல்சுருக்கத்திற்கு மற்றுமொரு காரணம் தோலில் உள்ள கொல்லாஜன்(skin collagen) எனும் புரதம் குறைவது.

இதனால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும்.
நாள் தவறாமல் ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும்.

இதைத் தவிர்க்க ஈரப்பதத்துடன் கூடிய நல்ல தரமான ஷேவிங் கிரீமை(shaving cream) பயன்படுத்துவது நல்லது.

மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்ய வேண்டும்.

பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்யும்போது முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்கும்.
ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க முதலில் தொடர்ச்சியான நல்ல உடற்பயிற்சி அவசியம்.

உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய antioxidant குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.

அதேபோல் உட்கொள்ளும் உணவுகளும் முக்கியம். பச்சைக் காய்கறிகள், பழங்கள்,(Green vegetables, fruits) உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள், பருப்பு வகைகள்(Pulses), மீன்(Fish) போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அவுரிநெல்லிகள், பசலை கீரை, பச்சை தேநீர், கேரட், தக்காளி, ஆகியவற்றையும் கூடுதலாக சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

முதிய தோற்றத்திற்கு தூக்கம் கெடுவதும் ஒரு முக்கியக் காரணம்.

இதனால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

தாம்பத்ய உறவிற்கும் முதுமைத் தோற்றத்திற்கு தொடர்ப்பு இருப்பதாக வல்லுநனர்கள் கூறுகிறார்கள். எனவே அதிலும் முறையான பழக்கவழக்கங்களை பெற்றிடவேண்டும்.

இந்த பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும்.

சருமத்தில் பொலிவு ஏற்படும். மேலும்
இறுதியாக இவற்றையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் மனதில் கவலைகள் இல்லாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மேற்கூறிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலும், மனதில் கவலைக்கொண்டால் அனைத்துமே வீண்தான்.

எனவே மனதில் மகிழ்ச்சியுடன் கூடிய எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, கவலையை தூக்கி வெளியே எறிந்து விடுங்கள். என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். புதுப்பொலிவுடன் இருக்கலாம்.

முதுமை என்பது என்றுமே உங்கள் தோற்றத்தில் வரவே வராது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More