The news is by your side.

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர், நாளை

0 24

india-australia-world-cup-out

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நாளை ஆரம்பிக்கவுள்ளது. பேர்த் மைதானத்தில் நாளை காலை 8.50 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடனேயே, இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளும் கடந்தாண்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்கள் இரண்டில் சந்தித்திருந்தன.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா பங்குபற்றிய முத்தரப்புத் தொடரும், உலகக் கிண்ணமுமே அவையாகும். அவை இரண்டிலும், அவுஸ்திரேலிய அணியே சம்பியனானதுடன், எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்த, இந்தியா தவறியிருந்தது. ஆனால், அந்தத் தொடரில் பங்குபற்றிய அவுஸ்திரேலிய அணியை விட, தற்போதுள்ள அவுஸ்திரேலிய அணி, அனுபவம் குறைந்த அணியாகவே இருக்கிறது. மாறாக, இந்திய அணியில் அவ்வாறான நிலை காணப்படவில்லை.

எனவே, விறுவிறுப்பான தொடராக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் பங்களாதேஷிடமும், சொந்த நாட்டில் வைத்து தென்னாபிரிக்காவிடமும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்த நிலையில், ஓரளவு அழுத்தமான சூழ்நிலைக்கு மத்தியிலேயே, இந்தியா களமிறங்குகிறது. நீண்டகால ஓய்வுக்குப் பின்னர், இந்திய அணியின் தலைவராக மகேந்திரசிங் டோணி களமிறங்குகிறார். அத்தோடு, இடது கை வேகப்பந்துவீச்சாளரான பரிந்தர் ஸ்ரான், தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் பங்களாதேஷிடமும், சொந்த நாட்டில் வைத்து தென்னாபிரிக்காவிடமும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்த நிலையில், ஓரளவு அழுத்தமான சூழ்நிலைக்கு மத்தியிலேயே, இந்தியா களமிறங்குகிறது. நீண்டகால ஓய்வுக்குப் பின்னர், இந்திய அணியின் தலைவராக மகேந்திரசிங் டோணி களமிறங்குகிறார்.

அத்தோடு, இடது கை வேகப்பந்துவீச்சாளரான பரிந்தர் ஸ்ரான், தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: ஷீகர் தவான், றோகித் ஷர்மா, விராத் கோலி, அஜின்கியா ரஹானே, மகேந்திரசிங் டோணி, குர்கிறீட் சிங், ரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், பரிந்தர் ஸ்ரான், இஷாந்த் ஷர்மா. அவுஸ்திரேலிய அணி, தனது விளையாடும் பதினொருவரை உறுதிப்படுத்தியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான ஜோயல் பரிஸ், ஸ்கொட் போலன்ட் ஆகியோர், தங்களது அறிமுகங்களை மேற்கொள்ளவுள்ளனர். அவுஸ்திரேலிய அணி: டேவிட் வோணர், ஆரொன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித், ஜோர்ஜ் பெய்லி, கிளென் மக்ஸ்வெல், மிற்சல் ஸ்டார்க், மத்தியூ வேட், ஜேம்ஸ் போக்னர், ஸ்கொட் போலன்ட், ஜொஷ் ஹேஸல்வூட், ஜோயல் பரிஸ்.

Leave A Reply

Your email address will not be published.