Ceylon Moors
Tamil News News Network

அய்யூப் அஸ்மின் அவர்களுக்கெதிரான ஆர்பாட்டத்திற்கும் யாழ் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. ca

0 15


கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களுக்கெதிரான  ஆர்பாட்டத்திற்கும் 
யாழ் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள் கூட்டாகத் தெரிவிப்பு.
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ஜனாப் ஏ.எச்.ஜமால் மொஹிதீன், 
யாழ், கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் தலைவர் ஜனாப் எம்.யூ.எம்.தாஹிர், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஜனாப் தமீம் ரொஷான், யாழ் முஸ்லிம் வர்த்தகர் சங்கப் பிரதிநிதி ஜனாப் ஷாஹுல் ஹமீத் முஜிபுர்ரஹ்மான், யாழ்ப்பாணம் சின்னப்பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர் ஜனாப் ஐ.எல்.நிராஸ், காமால் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர் ஜனாப் மஹானாஸ், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி தலைவர் ஜனாப். எம்.எல்.லாபிர், ஆகியோரைத் தொடர்புகொண்டு மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கும் யாழ் முஸ்லிம் சமூகத்திற்கும் உள்ள தொடர்புகுறித்து வினவியபோது அவர்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லையென்றும், மேற்படி ஆர்ப்பாட்டமானது யாழ் மாநகரசபை உறுப்பினர் ஜனாப் கே.எம்.நிலாம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்டக்கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்கள்.
நேற்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களுக்கு எதிராக ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து  சிறு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன்; ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களது உருவப்பொம்மையொன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரியூட்டப்பட்டது; 

மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளர் சுவர்கஹான் விடுத்ததாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்துவெளியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொஷான் அவர்கள்; 
பத்துப் பேர் சேர்ந்து செய்யும் செயலை யாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார், அத்தோடு இது சிறுபிள்ளைத்தனமான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்துவெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள்; மேற்படி ஆர்ப்பாட்டம் எதிர்பார்க்கப்பட்டதொன்றாகும், யாழ் மாநகரசபைத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றிபெறாது பணத்தினால் வெற்றிபெற்ற ஒருவர் தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் அமைச்சரோடு இணைந்து போதைவஸ்து வியாபாரத்திற்கு உதவிவருகின்றார்; அதனை தற்போது நாம் வெளிக்கொண்டுவரத் தொடங்கியிருக்கின்றோம்; இதனைப் பின்னணியில் வைத்து முஸ்லிம் மக்களை உணர்வு ரீதியாகத் தூண்டிவிட்டு, ஹிஜாப் விவகாரத்தை கையிலெடுத்து நான் குறிப்பிடாத, கூறாத கருத்துக்களை நான் கூறியதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கின்றது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை புனித வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைப் பயன்படுத்தி  முன்னெடுப்பது கவலையளிக்கின்ற விடயமாகும். இச்செயற்பாடுகளுக்கு யாழ் முஸ்லிம் சமூகம் தக்க பதிலை மிக விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். 
செய்தித் தொகுப்பு; அமலினி அற்புதராஜா தகவல் என்.எம்.அப்துல்லாஹ் 

இது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்!!

You might also like
Comments
Loading...