The news is by your side.

அப்பல்லோவில் அம்மா!…

0 37

jajaஉடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன.

அவ்வகையில், கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப் மூலமாக ஒரு ஆடியோ வதந்தி படுவேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கம்பீரக்குரலுக்கு சற்றும் பொருந்தாமற்போனாலும், அவர் உரையாற்றும் அதே தொணியில் சற்று தழுதழுத்த குரலில் யாரோ ஒரு ‘டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ பேசியிருந்த அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களை சுற்றி வந்தது.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வந்த அந்தப் போலி ஆடியோவின் சாயம், சில நாட்களுக்குள் வெளுத்துப் போனது.

தற்போது, ‘அப்பல்லோவில் அம்மா!’ என்ற தலைப்பில் அவர் சிகிச்சை பெறும்போது எடுக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.jaja01

Leave A Reply

Your email address will not be published.