Aram News1st
Tamil News Website from Sri Lanka

அப்பம் சுட்டவன்…

0 24

அப்பம் சுட்டவன்
___________________

5 (1)

முகத்திலடி ஒரு சுவர்க்கடிகாரம்
உருகி நீராகிப்போ
கட்டி முடிக்கப்பட்டு விட்டது அவள் நினைவாலயம்
நீ உறங்கப்போ

150px-Valmet_wall_clock

இடிகள் முழங்கி அம்மரக்கதவுகளைச் சாத்தி
மின்னல்கள் பட்டு மசூதிகள் உடைந்து
விடிந்தது அகதிகளாகி

பாறையோரம் கருக்கலில் நிற்கிறாய்
வசீகர அழைப்போடு
ஆச்சரியங்களால் கசக்கி
நட்புப் பெருகும்படி கிளிபோல் பேசி
உறவானதும் முதுகு திரும்பி முகத்திலெறிந்து
கைகளால் கழிவறையைக் காட்டிய மன்னா
அங்கேயே நில் வராதே

சுவாசிக்க இழுக்கப்படும் மூச்சில்
அடுத்த காற்றாக உன்னையே வரவேற்றோம்
செருகியிருக்கும் விழிகளை உன்னிடமே ஒப்புவித்தோம்
அப்பொழுது படிக்கட்டுகளில் தனியாக அலைந்த
உன் பாதங்கள்
வெள்ளைத் திரைகளில் அப்பம் சுட்டன
உன் மூச்சுக்காற்றும் நீலரசமாகிக் கொதித்தது

சூரியனைக் கயிறு கட்டி இறக்கிய பேரிகை
இன்னும் ஓயவில்லை
காற்றுப் பழுத்து நாசி வெடித்து மடி பிளந்திற்று
நிற்க வைப்பதே பாவம் பிடி அவனை.

-நபீல்.

padam322

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More