Aram News1st
Tamil News Website from Sri Lanka

அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரி நான்கு விரிவுரையாளர்களுக்கு பிரியாவிடை

0 64
unnamed (1)


(mohammed jawfar Mohammedsajeeth)
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியிலிருந்து மாற்றலாகிச் சென்ற திருமதி எம்.கே.எம். மன்சூர், எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா , கே .நிதிகரன்,திருமதி யோகானந்தகிரி ஆகிய நான்கு விரிவுரையாளர்களினதும் சேவையைப் பாராட்டி பகலுணவும் பரிசுப் பொருட்களும் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும் பிரியாவிடைச் சொற்பொழிவு வைபவமும் இன்று 2017.01.25 ஆம் திகதி கல்லூரியின் கௌரவ பீடாதிபதி அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நவாஸ் அவர்களின் தலைமையில் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி நான்கு பேரினதும் மகத்தான சேவையை நினைவுகூர்ந்து விரிவுரையாளர்களான ரீ.கணேஷரத்னம், எம்.ஐ.எம். ஜஃபர், எம்.பீ. ஏ. அஸீஸ், ஏ. எல் . நாஸிர் கனி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பீடாதிபதி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றியதுடன் பிரியாவிடை பெற்ற விரிவுரையாளர்களுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்

unnamed (2)
unnamed (3)
unnamed (4)

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More