The news is by your side.

அக்கரைப்பற்றைத் தேடிய பொத்துவிலும் பொத்துவிலைத்தேடிய அக்கரைப்பற்றும்

0 49

oman-jobs-20130531-1-640x305

( நளீம் லதீப் )

மிக மிக ரம்மியமான தெண்னந் தோப்புகளும், குளுந்த காற்றும்,
முருங்கை மரத்தின் சலசலப்புகளும், “ஓமான்” சலாலாவில் சிலு சிலுக்க ‘கல்முனை’ அறூஸ் அங்கு குதூகலமாய் வாழ்ந்து வருகிறார்:-
salalah-oman-035

இந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பர் உனைஸின் மாமாவின் குறுங்கால பயணமும் அவ்வமையம் சந்தோசமாய் அமைந்தது . இருவரும் மிக மிக அண்ணியோன்யமாக நடந்து கொண்டனர். சலாலாவின் பல சிறப்புமிக்க இடங்களுக்கும் சென்று வந்தனர்.

290224194_6226057fc2

பின்னர் உனைசின் மாமா (சாலின் B.A) இலங்கை செல்ல வேண்டியிருப்பதனால்
அறூஸிடமிருந்து விடை பெறுகிறார். அத்துடன் ஒரு பணிவான வேண்டுகோளையும்
விடுக்கிறார் நீங்கள் இலங்கைக்கு வந்தால் கட்டாயம் அக்கரைப்பற்றுக்கும் வந்து போக வேண்டுமென்று கூறி அக மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்
சில நாட்களின் பின்னர் மீண்டும் இலங்கை சென்றுவிட்டார்.

Salalah_oman_Dhofar_Khareef_-

இப்படி காலங் கடக்கையில் றமழானும் நெருங்கியது அறூஸின் வெக்ககேசனும் (விடுமுறை)வந்து விட்டது.

600px-Al_hafa_corniche

இனி இலங்கை திரும்புகிறார் அறூஸ்….
தனது மனைவி பிள்ளையுடன் தனது குடும்ப நண்பர்களைச்சந்தித்து அகமகிழ்கிறார்…

இப்படியாக சில நாட்கள் கடந்தபின் தனது வாப்பாவின் மாமா பொதுவிலில் வசிப்பதாக அறிந்த அறூஸ் ஒருவாரு அவரது தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

அதே சமயம் உனைசின் மாமா அக்கரைப்பற்றில் இருக்கிறார் பொத்துவிலுக்குப் போய்
வரும் வழியில் சந்திக்கலாம் என்றென்னி உனைசிடம் அவரது தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே இவ்விருவருடைய தொலைபேசி இலக்கங்களும் அறூசுடைய தொலைபேசியில் இருக்கிறது ஆனால் பெயர்களுடன்(save) சேமிப்பு பதியப்படவில்லை நம்பர்கள் மாத்திரமே பதிவிலுள்ளது.

மறுநாள் காலை அறூஸ் பொத்துவிலுக்குச் செல்வதெற்காக தனது வெள்ளை நிறக் காரில் தனது மனைவி,மற்றும் மகன் ஆபித் உடனும் தம்பியுடனும் தயாராகி காரைதீவை வந்தடைந்தனர் அவ்வமையம் பொத்துவில் மாமாவுக்கு அழைப்பை
ஏற்படுத்தி தான் பொத்துவிலுக்கு வருவதாக அறிவித்தார். அதே சமயமே அக்கரைப்பற்று உனைசின் மாமா சாலின்(B.A)இற்கும் தான் பொத்துவில் மாமாவின்
வீட்டுக்குச்செல்வதாகவும் திரும்பி வரும் போது உங்கள் வீட்டுக்கும் வருவேன்
எனவும் கூறிய அறூஸ் தனது பயணத்தை இனிதே தொடர்கிறார்…
அக்கரைப்பற்றை எல்லாம் தாண்டி சாகாமத்தைச் சென்றடைகிறது வெள்ளை நிறக் கார்
அந்தநேரம் ஒரு தொலைபேசி அழைப்பு….
எதால வாரீங்க! அதற்கு அறூஸ் கூறுகிறார் ஆ…..
நாங்க சாகாமம் கழித்து வந்துக்கிருக்கோம் என்று…. ஆ அப்படியா அப்ப குயிக்கா வந்திட்டீங்க! என்கிறார் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர்.

35a9c9e1-bcf7-48e2-a52d-d6da9550cddd_S_secvpf

அதற்கு அறூஸ் ஓ…றபீக் வுளக் இல்லத்தானே! அதால குயிக்கா வந்திட்டம்
இன்னும் கொந்சத்தில வந்திடுவம் என்றார் அதற்கு அழைப்பை ஏற்படுத்தியவர் கூறுகிறார் அப்ப நீங்க “டௌன்” பள்ளியடிய வாங்க நான் அவடத்த வாரன் என்று கூறி தொலைபேசி அழைப்பை கட் செய்து விட்டார்.

உண்மையில் இந்த தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர் உனைசின் மாமா சலின்(B.A)ஆனால் அறூஸ் நினைத்தது வாப்பாவின் மாமாதான் இப்போது கோல்
எடுத்ததென்று…..

இதற்கிடையே உனைசின் மாமா அக்கரப்பற்றில் நின்று கொண்டு அங்குள்ள “டௌன்”
பள்ளியடியே தேடுகிறார்
இவருக்குத்தெரியாது அறூஸ் பொத்துவிலில் நிற்பது…

இப்படித் தொடர்கிறது கதை கேளுங்கள்………

சரி என்று கூறிய அறூஸ் பொத்துவில் “டௌன் பள்ளி” எதுவென்று கேட்டு அந்தப்பள்ளியடியைச் சென்றடைந்தார்.
பின்னர் தனது வெள்ளை நிற காரை நிறுத்திவிட்டு..
பொத்துவிவில் மாமா என நினைத்து அக்கரைப்பற்றில் தற்போது நிற்கிற சாலின்(B.A) இற்கு கோல் எடுத்துச் சொல்கிறார்…

akkarai-3

சரி நாங்க “டௌன்” பள்ளியடியதான் நிற்கம் வெள்ளக்கலர் கார் ஒன்று அதுக்குப்பக்கத்திலதான் நிற்கம் நாங்க வந்திட்டம் நீங்கவாங்க என்று-..
அக்கரைப்பற்றில் சாலின்(B.A) வெள்ள கலர் காரைத்தேடுகிறார்..

400px-Sandhill

பொத்துவிலிலே அறூஸ் நிற்கிறார்.
10–15 நிமிடங்கள் ஆகுது மாமாவைக்கானவில்லை…
இதற்கிடையே உண்மையான மாமாவுக்கு அறூஸ் பொத்துவிலுக்கு வந்தது இன்னும் தெரியாது..
என்னடா …15 நிமிடமாகவும் ஆகிவிட்டது இன்னாவாரன் என்டவர இன்னும் காணல்ல..
என்று யோசித்துக் கொண்டு நிற்கிறார் அறூஸ்…
இதற் கிடையே சரியான உச்சி வெய்யில் பசியொரு பக்கம் …
திரும்ப அறூஸ் கோல் எடுக்கிறார் எங்க வந்திட்டீங்கலா…

ஆ… நான் உங்களத்தான் தேர்ரன் எங்க வந்திட்டீங்களா….
வெள்ள காரையும் கானல்ல உங்களையும் காணல்ல…
அதற்கு அறூஸ் இல்ல நான் அவ்விடத்திலதான் நிற்கன்..
சிங்கர் சோறூம் ஒன்று இருக்கி அவ்விடத்தில்தான் நிற்கன்.
என்றார்.. அதற்கு மீண்டும் அவர் நானும் அவடத்ததான் தேர்ரன் உங்கள காணல்ல.
நில்லுங்க என்று சொல்லி கோலைக் கட் பண்ணி விட்டு மீண்டும்…
சாலின்(B.A)அக்கரைப்பற்று சிங்கர் சோறூமடியில் தேடுகிறார்….

அறூஸோ பொத்துவில் சிங்கரடியில் நிற்கிறார்…
இதற்கிடையில் ஊர்களின் பெயர்கள் உபயோகிக்கப்படவில்லை
ப்ள்ளியடி, சிங்கர் எனும் சொற்களே உபயோகிக்கப்படுகிறது

இப்படி அடிக்கடி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதனை பக்கத்திலுள்ள முபீதா ஹோட்டல் உரிமையாளர் அவதானித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் நிற்கிறார்
இவர் பேசி முடிந்ததும் முபீதா ஹோட்டல் உரிமையாளர் கேட்கிறார் அறூஸிடம் எங்க போப்பிரீங்க என்று ..

பொத்துவிலுக்குத்தான் வந்திருக்கம் அவரு “டௌன்” ப்ள்ளியடிய வரச் சொன்னாரு…
வந்திருக்கம் அவரக்காணல்ல என்கிறார் அறூஸ்….
001

“டௌன்” பள்ளியென்டா இதானே… இவ்விடத்ததானே நிக்கிங்க….
அவரும் அவடத்தான் நிக்காராம் அவரக் காணல்ல… என்கிறார் அறூஸ்….
அதற்கு ஹோட்டல் உரிமையாளர் கூறுகிறார் திரும்பக் கோல் எடுத்தா எனக்கிட்டத்தாங்க் என்றார்….
சரி என்று கூறி நிற்கக்குள்ள கோல் வருகிறது…
எங்க உங்கள காணல்ல சிங்கரடியையும் உங்களத் தேடினேன் உங்கல கானல்லியே!
என்றார்….
அதற்கு அறூஸ் ஆ…. பக்கத்தில ஒரு ஹோட்டல் காரால் இருக்காரு அவருகுக்கிட்டப் பேசுங்க என்று தொலைபேசியை ஹோட்டல் காரரிடம் கொடுத்தார்…
ஆ…. அவங்க முபீதா ஹோட்டலடிய நிக்கிறாங்க நீங்க முபீதா ஹோட்டலடிய வாங்க என்று கூறியதும்
இவரும் ஆ…. சரி என்று கூறி திருப்ப அக்கரைப்பற்றில் முபீதா ஹோட்டலைத்தேடுகிறார்.
எல்லாப்பொடியன்மாரிடமும் கேட்கிறார் …
எங்கடாதம்பி முபீதா ஹோட்டல் இருக்கு என்று … அதற்கு அப்படியொரு ஹோட்டலே
அக்கரப்பத்தில இல்ல என்று சொல்லிட்டானுகள் பொடியனுகள்..
இதற்கிடையே இன்னும் ஒரு மனி நேரம் ஆகிவிட்டது ஹோட்டலடியிலேயே நிற்கிறார்
அறூஸ்….

இதன் பின்னர் ஹோட்டல் காரால் விசாரிக்கிறார்….பொத்துவில் மாமாவைப்பற்றி..
அவர் எப்படி இருப்பாரு, அவர்ர பெயர் என்ன, என்ன செய்கிறாரு என்றெல்லாம்
விசாரிக்கிறாரு (இதற்கிடையில் அரூஸிற்கு மாமாவின் பெயர் தெரியாததும் ஒரு
புதினம்தான்….)

இப்படியே அறூசும் அடையாலமெல்லாம் சொல்லியவுடன் ஹோட்டல் காராலும்
புரிந்து கொண்டார். அறூஸின் மாமாவை அவருக்கு நன்றாகவே தெரியும்.
அவரு எனக்கு மாமாதானே அவருக்கு நீங்க கோல் எடுங்க நான் சொல்றன்
என்றாரு.
இதற்கிடையில் ஒரு விசயம் –

மரணித்த ஜுனைதீனின் மாமா அறூஸின் வாப்பாவின் மாமா
முபீதா ஹோட்டல் காறருக்கு அறூஸின் வாப்பாவின் மாமா-அவருக்கும் மாமா
அக்கரைப்பற்றில் இருக்கிற சாலின்(B.A) உனைஸின் மாமா
இப்படி மாமா என்கிர பிரச்சினை ஒரு பக்கம்…..

தொடர்கிறது கதை கேளுங்கள்….

அறூஸ் திரும்பக் கோல் எடுத்து இவர்ட்ட நீங்க கதைங்க என்று ஹோட்டல் காரரிடம் கோலைக் கொடுக்கிறார்…
ஹோட்டல் காரால் மாமாதானே என்றென்னி கடும் அவாவுடன் பேச்சுப்பழக்கத்தில்

Indian man talking on cell phone near the India Gate

மாமோவ்”” என்ன மாமா நீங்க! என்னத்தெரியாதா?…. நீங்க “டௌன்”ல நிக்கிரன் எங்கிரீங்க.. “டௌன்’பள்ளியடிய அவங்களும் நிக்காங்க … நீங்க வாங்களன்
அவடத்த… நான் ரொட்டிக்கட காதர்ர மகந்தான் பேசுரன் என்ராரு…
இதனைக்கேட்ட சாலின்(B.A)….

என்ன்டா நம்மள ஒருவன் ம்மாங்”‘கான் எனும் யோசனையும் ஒரு பக்கம்..
மாமா..மாதுன்ட வஸ் புக் பன்ற கட அதுக்குப்பக்கத்தில அப்புள் கட அந்தக் கடக்கி முன்னுக்குத்தான் என்ட கட இருக்கி முபீதா ஹோட்டல் நான் ரொட்டிக்கட காதர்ர மகன்தான் பேசுரன் நீங்க அவடத்த வாங்க மாமா …..
என்று கதைதுக் கொண்டிருக்கும் போது ஏதோ!. பொத்துவில் +அக்கரைப்பற்று கதையும் போகுது….

கடைக்காரர் கேட்கிரார் ஹலோ… நீங்க.. அக்கரப்பத்தா?….பொத்துவிலா?…என்று..
அப்போ…சாலின்(B.A) இற்குகோபம் வந்து விட்டது…

“என்னம்பி பகடி பன்றிங்களா… என்று சொல்லிப்போட்டு நில்லுங்க நான் தேடி வாரன்
என்றே போனைக் கட் பண்ணிவிட்டார்….
இதன் பின்னர் கடக்காரருக்குக் கோபம்….

என்ன மனிசன் அந்தால் பொத்துவில்ல இருந்துகிட்டு ஒன்டும் தெரியுதில்ல..
அப்புள் கடயும் தெரியா…அந்த மாதும்ட வஸ் புக் பன்ரகடையும் தெரியா…என்ட ஹோட்டலும் தெரியா…என்னத்துக்காம் அவரு பொத்துவில்ல இருக்காரு….
அந்தால்.. அக்கரப்பத்தில நின்டுகிட்டு உங்கள பொத்துவிலுக்கு வரச்சொல்லி இருக்கிராறோ தெரியா…
அப்பவும் அறூஸிக்குப் படவில்லை இந்த விசயம்
என்னமோ தெரியா.. அந்தால் அக்கரப்பத்துல நிக்காரோ தெரியா….
என்று கூறியே புறப்படத்தயாராகுரார்……..

கதைத்துக் கதைத்து நிற்கவானாம் வந்த்தற்கு எதன்டான பாத்துக்குப் போவோம்…..
எனக் கூறுகிறார் இவ்வளவு நேரமும் பொறுமையாகவிருந்த அறூஸின் அன்பு மனைவி
இதற்கிடையில் அவருக்குக் கோல் எடுத்து சரி நீங்க நில்லுங்க எப்படி என்றான் கேட்டு
வாரம் என்ரு சொல்லியே உல்லைப்பக்கமாக காரைத்திருப்ப திரும்பக் கோல் வருகிறது….

haptics_lg-mobile-interface

சொல்ராரு நான் அக்கரைப்பற்று வேங் ஒப்சிலோன்டிய நிக்கன் நீங்க அவடத்த வாங்க
என்று…
அப்பதான் விளங்கியது நாம இவ்வளவு நேரமும் பேசியது சாலின்(B.A)யுடந்தான் என்று

கிட்டத்தட்ட 3 மனித்தியாலயங்கள் நிகழ்த்தப்பட்ட சாதனைக்கதை இது……
ஏன் என்றால் அப்படி முகப்பத்தாக இருவரும் ஓமானில் இருந்துக்கிட்டார்கள்
சில நாட்கள்…

அதற்குப்பிறகு நான் இன்னாருக்கு எடுக்கவேண்டிய கோல் தவறுதலாக உங்களுக்கு
எடுபட்டு விட்டது எனக்கூறிய அறூஸ்
பொத்துவிலில் இருந்து வரும் போது உங்கல் வீட்டுக்கும் வருகிறேன் எனக்கூறிய
அறூஸ் மறு கனமே…….

haptics_lg-mobile-interface

மற்ற நம்பருக்கு விரைவான அழைப்பை ஏற்படுத்துகிறார்……………………….
அது உண்மையிலேயே வாப்பாவின் மாமாதான் கரக்டாக இடத்தினைக்கூறினார்
சரியாகவே இவர்களும் சென்று சந்தித்து விடை பெற்றனர்………

அதன் பின்னர் 5.30 மனிக்குப் பின்னர் அக்கரைப்பற்று “டௌன்” பள்ளியடியில் அறூஸினுடைய வெள்ளக்கலர் கார் நிற்கிறது………..

mo

சாலின்(B.A)இற்கான யதார்த்தமான தொலைபேசி அழைப்பு………
ஆ…. இப்பதான் உங்கட “டௌன்” பள்ளியடிய வந்திருக்கன் என்று….
அந்த நேரம் உனைஸின் மாமா இன்னா வாரேன் என்று சொல்லி பள்ளிக்குள் இருந்து
வருகிறார்……

1

அறூஸினுடைய முதுகில் ஒரு தட்டுத்தடுகிறார் -என்ன சொன்னீங்க இப்பானா பள்ளியடிய வந்திருக்கீங்க நான் இந்த ‘டௌன்’ பள்ளியில் இருந்து அங்கால ஒரு கிலோ மீற்றர் இங்கால ஒரு கிலோ மீற்றர் நடந்திருக்கன் என சாலின்(B.A)யும் கூற
இருவருமே அவ்விடத்தினை சுவாரஸ்யமாக அணுபவித்தனர்……
இதற்கிடையே…இவ்விபரம் வாப்பாவின் மாமாவுக்குத் தெரியாது……….
ரொட்டிக்கட காதர்ரமகன் கூறினாலன்றி………………

POIGNEE_DE_MAIN

=======================================================================================
குரிப்பு:- யாருடைய தொலைபேசி இலக்கத்தை நீங்கள் வாங்கினாலும்
பெயரோடு வாங்குங்கள், சரியான பெயரை நம்பரோடு உடனே பதிவு
செய்யுங்கள்-இல்லாதுவிடின் பொல்லாது பாடுபடவரும்.
கிரகிப்பு:- Naleem latheef 414 A ,al-hilal Road, saintha maruthu-11
0094 776276060 srilanka
=======================================================================================
sun-flower_3314

Leave A Reply

Your email address will not be published.